கடினமான உடற்பயிற்சி வேண்டாம்! உடல் எடையைக் குறைக்க இந்த ஒரு காய் மட்டும் போதும்!

By manimegalai aFirst Published Oct 1, 2018, 2:14 PM IST
Highlights

இந்திய சமையலில் பூசணிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. இனிப்புச் சுவை கொண்ட பூசணிக்காய் உடல் எடையை குறைக்கும் குறைக்கும் என்பது அதன் மற்றொரு இனிமை.

இந்திய சமையலில் பூசணிக்காய்க்கு முக்கிய இடம் உண்டு. இனிப்புச் சுவை கொண்ட பூசணிக்காய் உடல் எடையை குறைக்கும் குறைக்கும் என்பது அதன் மற்றொரு இனிமை.

பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன சோடியம், உடலுக்குத் தேவைப்படும் நல்ல கொழுப்பு, ஸ்டார்ச் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளைக் கொண்டது பூசணிக்காய்.

பூசணிக்காயில் உள்ள சதை, விதை, விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகியவை பல்வேறு நன்மைகளைக் கொண்டவை.

பூசணிக்காய் கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் தினமும் உணவில் சிறிது பூசணிக்காயைச் சேர்த்தால் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். 100 கிராம் பச்சை பூசணிக்காயில் மிகக் குறைந்த அளவாக வெறும் 26 கலோரிகள் மட்டுமே  உள்ளன. மிக அதிக அளவாக ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 45 சதவீதம் வரை உள்ளது. அதிக நேரம் பசி தாங்குவதால் உடல் எடைக்கு காரணமான ஸ்நாக்ஸ் சாப்பிடும் விருப்பத்தைக் குறைக்கிறது.

உடற்பயிற்சிக்க்குப் பின் பூசணிக்காயை சாலட்டாகவோ சூப்பாகவோ சாப்பிட்டால் நாள் முழுக்க தேவைப்படுகின்ற முழு ஆற்றலையும் பெற முடியும்.  பூசணிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
  
பூசணிக்காயில் உள்ள ட்ரைடோபமைன், அமினோ அமிலங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.

எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வாரத்துக்கு 3 முறையாவது பூசணிக்காயை உணவில் சேர்க்க வேண்டும்.

click me!