நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்..! உஷார்...!

First Published Mar 13, 2018, 6:04 PM IST
Highlights
pre indications for health dieases


நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால்  

கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால்

கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால்

ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்

காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால்

கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால்

அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்

உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால்

உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்

அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்

உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்  

உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

 கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால்

இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

click me!