உங்களுக்கு மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் 5 பொருட்கள்..! எங்கு வைப்பது நல்லது?

Anija Kannan   | Asianet News
Published : Jan 26, 2022, 07:20 AM ISTUpdated : Jan 26, 2022, 07:27 AM IST
உங்களுக்கு மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் 5 பொருட்கள்..! எங்கு வைப்பது நல்லது?

சுருக்கம்

சிரிக்கும் குபேர பொம்மை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்புக்கு சிறப்பு வாய்ந்தது. அதை நாம் எப்போதும் டேபிளில் வைத்திருப்பது நல்லது.

இன்றைய நவீன உலகில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய இயலாது. பணம் பத்தும் செய்யும் என்பது ஐதீகம் அந்த அளவிற்கு நமது வாழ்வில் முக்கிய அங்கத்தை பணம் பிடித்துள்ளது. அப்படியான, பணத்தை எளிதில் அதிகரிக்க  வாஸ்து வல்லுநர்கள் சில வழிமுறைகளை கூறுகின்றனர். 

அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் நாம் வைத்திருக்கும் அழகழகான பொம்மைகளுள், குபேர பொம்மையும் (Laughing Buddha) அடங்கும்.  ஆனால், குபேர பொம்மையை பொதுவாக வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெங் சுய் நடைமுறையில் சிரிக்கும் குபேர பொம்மைக்கு (Laughing Buddha) சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதை, வீட்டில் வைத்திருப்பதால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை. இத்துடன், கடன் பிரச்னையும் விலகும் என்பது நம்பிக்கை. குபேர பொம்மை (Laughing Buddha) மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த குபேர பொம்மையை (Laughing Buddha) நம்முடைய டேபிளில் வைத்திருப்பதால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும், கடன் பிரச்னையும் விலகும் என்பது நம்பிக்கை. 

டிராகன் சிலை:

ஃபெங் சுய் என்கிற சீன முறையால் அங்கீகரிக்கப்பட்ட தங்க டிராகனை வீடுகள் அல்லது கடைகளில் வைத்து கொள்ளலாம். இதை புத்தருக்கு அருகில் அல்லது அதன் எதிர் பக்கத்தில் வைக்கவும். ஃபெங் சுய் மற்றும் சீன கலாச்சாரத்தின் படி இந்த டிராகனானது அதிர்ஷ்டமான ஒன்றாகும். மற்றும் இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு பல வெற்றிகளை தரும். எனவே ஒரு நல்ல சிலையை வாங்கி வையுங்கள். 

சிங் நாணயங்கள்:

வெண்கல நிறத்தில் சதுரமாக வெட்டப்பட்ட மையத்துடன் வட்ட நாணயங்களை பணம் அதிகரிக்க பல இடங்களில் பயன்படுத்துவார்கள். இது சிவப்பு பட்டு அல்லது கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் அதிர்ஷ்டத்தை தர கூடியவை. இதிலுள்ள வட்ட வடிவமானது சொர்க்கத்தைக் குறிக்கிறது மற்றும் சதுர வெட்டானது பூமியை குறிக்கிறது. இதை உங்கள் டேபிள் அல்லது கதவு கைப்பிடியில் தொங்க விடலாம்.

ஊதுபத்திகள்:

காலையில் ஊதுபத்திகள் இறைவனுக்கு காட்டி படைக்கும் பழக்கம் மிகவும் நல்லது. இதன் மூலம், உங்கள் வருமானத்தில் செழிப்பைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்ட முடியும். ஊதுபத்திகளில் சிவப்பு நிறங்கள் கொண்டவை மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

பணத் தவளை: 

இது செல்வத்தை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. இது தங்கம் அல்லது பீங்கான் ஆகியவற்றால் ஆனது. இதை உங்கள் மேசையின் நுழைவாயில் அல்லது வடக்குப் பகுதிக்கு அருகில் வைக்கலாம். குறிப்பாக இதை வெளிப்புறமாக வைக்க கூடாது. எனவே உள்நோக்கி நடனமாடுவது போன்ற முறையில் வைக்கலாம்.

மணி பிளான்ட்:

 மணி பிளான்ட் போன்ற சிறிய தாவரங்களை வீட்டில் நாம் வளர்ப்போம். பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். இதை நம்முடைய டேபிளில் வைப்பதால், கடன் தொல்லை தீரும் பணம் பெருகும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

எனவே, உங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் இந்த 5 பொருட்களையும், வாங்க உடனே புறப்படுங்கள்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்