
பிறந்த நாளில் கெத்து காட்டும் மோடி..! உலக அளவில் முதல் 7 இடத்தை தட்டி தூக்கி தூசு கிளப்பிய மோடி ..!
இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 69 ஆவது பிறந்த நாள் என்பதால் தொடர்ந்து குவிந்து வரும் வாழ்த்துக்களில் ட்விட்டர் பக்கமே ஸ்தம்பித்து உள்ளது. அந்த வகையில் முதல் 7 இடங்களில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வாழ்த்து குறித்த செய்தி மட்டுமே.
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 69 ஆவது பிறந்தநாள். நாடு முழுவதும் மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருவதால் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதல் 10 இடங்களில் மோடி குறித்த செய்திகளும் பிறந்தநாள் வாழ்த்து குறித்த செய்திகளும் மட்டும் முதல் 7 இடத்தை பிடித்து உள்ளது என்து குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.