மாமல்லபுரத்தில் அழகாக இருந்த புல்தரையை நாசமாக்கிட்டீங்களே பொதுமக்களே...! புலம்பும் தொல்லியல் துறை...!

By ezhil mozhiFirst Published Oct 14, 2019, 12:51 PM IST
Highlights

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட ஓர் நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது. 

மாமல்லபுரத்தில் அழகாக இருந்த புல்தரையை நாசமாக்கிட்டீங்களே பொதுமக்களே...! புலம்பும் தொல்லியல் துறை... 

மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த பிறகு அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து உள்ளது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட ஓர் நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது. இவர்களின் வருகையையொட்டி சாலைகள் சீரமைப்பு, அழகு செடிகள், குடிநீர் வசதி, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் சாலைகளுக்கு நடுவே அலங்கார செடிகள் என பல ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தது, இதனால் மாமல்லபுரம் புதிய பொலிவை பெற்றது, அதிலும் குறிப்பாக மின்விளக்குகளால் இரவு நேரத்தில் ஜொலி ஜொலித்தது.

இப்படியான நிலையில் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளித்த மாமல்லபுரம் இரு தலைவர்களின் சந்திப்பை அடுத்து மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதற்கு முன்னதாக இந்த சந்திப்பை ஒட்டி அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சுற்றுலா தளங்களை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சந்திப்பு முடிந்த பிறகு நேற்றுமுதல் எப்போதும் உள்ளவாறு பொதுமக்களை அனுமதிக்கப்பட்டனர். 

இதன்காரணமாக உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வெண்ணை உருண்டை பாறை, தபசு சிற்பம் என எதையும் விட்டு வைக்காமல் அனைத்து இடங்களிலும் அமர்ந்து ரசித்து செல்பி எடுத்துக் கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் போதுமான அளவு காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கும்போது, "மிகவும் தெளிவாக காணப்பட்ட மாமல்லபுரத்தை காண்பதற்காக நாங்கள் வந்துள்ளோம்... இனி வரும் நாட்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தருவார்கள் என நாங்கள் நம்புகிறோம்; மேலும் கடந்த 4 நாட்களாக எப்படி மாமல்லபுரத்தை மிகவும் பொலிவாக வைத்து இருந்தார்களோ அதே போன்று எப்போதும் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து' என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து தொல்லியல் துறை தெரிவிக்கும் போது, "பல லட்ச ரூபாயில் கலை சின்ன வளாகங்களில் புல்தரை அமைத்து இருந்தோம்.. ஆனால் சுற்றுலா பயணிகள் இதனை நாசப்படுத்தி வருகின்றனர். எப்போதும் மாமல்லபுரம் இதேபோன்று ஜொலிக்க வேண்டும் என்றால் அது எங்களிடம் மட்டுமில்லை... பொதுமக்களின் ஈடுபாடும் ஆதரவும் பங்களிப்பும் கண்டிப்பாக தேவை; நாம் எங்கு சென்றாலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்; இப்படி புல்தரையை இவ்வளவு நாசமாக்கினால் எப்படி இதனை பராமரிப்பது என கேள்வியை எழுப்பி வருத்தத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!