உஷார்..! 18 வயது நிரம்பாதவரா நீங்கள் ..? போலீசாரிடம் சிக்கினால் ... 25 வயது வரை லைசன்ஸ் வாங்கவே முடியாது...!

By ezhil mozhiFirst Published Sep 9, 2019, 2:11 PM IST
Highlights

கடந்த ஐந்து வருடங்களை பொருத்தவரையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதிற்கு கீழ் உள்ள  சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டும் ஆர்வத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஹெல்மெட் அணியாமல் வீட்டில் உள்ள வாகனத்தை எடுத்துக் கொண்டு படுவேகமாக சாலைகளில் இயக்கி வருகின்றனர். அவ்வாறு வேகமாக வாகனம் ஓட்டும் போது அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.எதிர்பாராதவிதமாக விபத்து  நிகழ்கிறது.

கடந்த ஐந்து வருடங்களை பொருத்தவரையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கார் ஓட்டுவதும் 2 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே இதனை தடுக்கும் பொருட்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது மோட்டார் வாகன சட்டம்.

2019 சட்டப் பிரிவு 199(ஏ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் அவர்களது பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், சிறுவர்கள் அடுத்து வரும் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனத்தை ஓட்டத் தடை விதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய 25 வயது வரை ஓட்டுனர் உரிமமும் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி மற்றவற்றுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை விட சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால் விதிக்கப்படும் அபராத தொகை தான் அதிகம் என்பது குறிப்பிடதக்கது

click me!