தோஷம் நீங்க வேண்டுமா ? செல்வம் பெருகணுமா ?  அப்ப இதை நீங்க உங்க வீட்ல வச்சிருங்க….

 
Published : Apr 07, 2018, 07:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தோஷம் நீங்க வேண்டுமா ? செல்வம் பெருகணுமா ?  அப்ப இதை நீங்க உங்க வீட்ல வச்சிருங்க….

சுருக்கம்

peacock feather gives wealth and health

ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்கவும், செல்வம் பெருகவும், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கவும் ஒவ்வொருவர் வீட்டிலும் மயில் இறகு வைத்திருக்க வேண்டம் என கூறப்படுகிறது.

  பொதுவாக மயில் முருகக் கடவுளின் வாகனம் என நம்பப்படுவதால்  அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்பார்கள், மேலும்

மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும்.



இந்த  மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் வீட்டின் வாஸ்து தோஷம் நீங்கும்.



நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் ,செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.



ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

மயில் இறகினால் இத்தனை நன்மைகளா?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!