
How to Choose School Bag For Kids : கோடை விடுமுறை முடியப்போகிறது. பள்ளிகள் திறக்க போவதால் குழந்தைகள் அதற்கு தயாராகி வருகின்றனர். புது ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், பேன், பென்சில் என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புதிதாக வாங்கிக் கொடுப்பார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் தங்கள் முதுகில் சுமந்து செல்லும் ஸ்கூல் பேக் கனமாக இருந்தால் அது அவர்களுக்கு முதுகு வலியை ஏற்படுத்தி, நாள்பட்ட எலும்பு மற்றும் தசைநார் பிரச்சனைகளை வழிவகுக்கும். எனவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி வராமல் அவர்களது முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க நல்ல ஸ்கூல் பேக் தேர்வு செய்வது பெற்றோருடைய கடமை. இது குறித்து பெற்றோர்களுக்கான சில முக்கியமான குறிப்புகள் பற்றி இந்த பதவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சரியான ஸ்கூல் பேக் தேர்வு செய்ய டிப்ஸ்:
1. எடை - குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் ஸ்கூல் பேக் எடையானது அவர்களின் உடல் எடையில் 10-15% விட அதிகமாக இருக்கக்கூடாது. உதாரணமாக, உங்கள் குழந்தையின் எடையானது 20 கிலோவாக இருந்தால் ஸ்கூல் பேக் எடையானது 2-3 கிலோவிற்குள் தான் இருக்க வேண்டும்.
2. அளவு - குழந்தையின் ஸ்கூல் பேக் குழந்தையின் இடுப்பு எலும்புக்கு மேலேயும் தோள்பட்டைக்கு கீழேயும் இருக்க வேண்டும்.
3. அகலமான மற்றும் மென்மையான பட்டைகள் - குழந்தையின் ஸ்கூல் பேக் தோல்பட்டையானது அகலமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். இது தோள்களில் அழுத்தத்தை ஏற்படுத்தாது.
4. பேலன்ஸ் ஸ்ட்ராப்கள் - குழந்தையின் உயரத்திற்கு ஏற்ப ஸ்கூல் பேக் ஸ்ட்ராப்களை சரி செய்யுங்கள். இது பேக்கை உடலுடன் இறுக்கமாக பொருத்தும்.
5. மார்பு மற்றும் இடுப்பு பட்டைகள் - குழந்தைகளின் ஸ்கூல் பேக் பட்டையானது மார்பு மற்றும் இடுப்பு உள்ளதாக தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது பையின் எடையை தோள்களில் இருந்து இடுப்பு மற்றும் மாறும் பகுதிக்கு மாற்றும். இதனால் குழந்தையின் முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்.
6. பல சீப்கள் - குழந்தையின் ஸ்கூல் பேக்கில் பல சீப்கள் இருக்க வேண்டும். இதில் புத்தகங்கள் மற்றும் பொருட்களை சமமாக வைக்க உதவும்.
7. கனமான புத்தகங்கள் - கனமான பொருட்கள் மற்றும் புத்தகங்களை ஸ்கூல் பேக்கின் கடைசி சீப்பில் வைத்தால் குழந்தைக்கு முதுகு வலியை ஏற்படுத்தாது.
8. பேக்கின் பின்புறம் - குழந்தையின் ஸ்கூல் பேக்கின் பின்புறமானது மென்மையாகவும், பின்புறத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இருக்க வேண்டும். இதனால் குழந்தையின் முதுகெலும்பில் நேரடி அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.
9. ரோலிங் பேக் - உங்கள் குழந்தையின் ஸ்கூல் பேக்கில் கனமான மற்றும் அதிக புத்தகங்களை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நீங்கள் ரோலிங் பேக் தேர்வு செய்வது சிறந்தது. ஆனால் இந்த பேக் படிக்கட்டில் ஏறும்போது கடினமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
10. தரமான பேக் - உங்கள் குழந்தைக்கு வாங்கும் ஸ்கூல் பேக் தரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் ஸ்கூல் பேக்கை அடிக்கடி மாற்ற தேவையில்லை.
குறிப்பு :
- குழந்தைகளை இரண்டு தோள்பட்டைகளிலும் ஸ்கூல் பேக்கை போட்டு விடுங்கள்.
- தேவையற்ற பொருட்கள் மற்றும் அதிக புத்தகங்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கவும்.
மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் குழந்தைக்கு ஸ்கூல் பேக்கால் முதுகு வலி ஏற்படாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.