சொந்த காசில் மக்களுக்கு வாரி வழங்கும் பஞ்சாயத்து தலைவர்..! நல்ல தலைவரை தேர்ந்தெடுத்த மக்கள்..!

By ezhil mozhiFirst Published Jan 29, 2020, 6:54 PM IST
Highlights

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய சொந்த செலவில் 2 வேன்களை மக்களுக்கு வழங்கி பெரும் மதிப்பை பெற்று உள்ளார். 

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய சொந்த செலவில் 2 வேன்களை மக்களுக்கு வழங்கி பெரும்  மதிப்பை பெற்று உள்ளார். 

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தண்டலசெரி ஊராட்சியில் நின்று வெற்றி பெற்ற ஆனந்தராஜ் என்பவர் தேர்தலின் போது தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளார். அதன்படி இந்த ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கவரப்பேட்டை என்ற இடத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சரியான நேரத்தில் அரசு பேருந்து வருவது கிடையாது. இதன் காரணமாக பள்ளிக்கு தாமதமாக சென்று பள்ளி பாடங்கள் சரிவர கவனிக்க முடியாமல் மீண்டும் வீடு திரும்ப மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இதுதவிர கிராமத்திலிருந்து செல்லக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில்  60க்கும் மேற்பட்டோர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக "தான் வெற்றிபெற்றால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக வாக்கு கொடுத்து இருந்தார்.  

அதன்படியே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தன்னுடைய சொந்த செலவில் இரண்டு வேன்களை கொடுத்து உள்ளார். இவை காலை இரண்டு முறை மாலை இரண்டு முறை இயங்குகிறது.

இதில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பாதுகாப்பாக மாணவிகள் இலவசமாக பயணம் செய்து சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.மேலும் மாத சம்பளமாக வேன் ஓட்டுனருக்கு மாத சம்பளமாக ரூ.12 ஆயிரத்தையும் தன் சொந்த செலவாக ஏற்றுக்கொண்டு உள்ளார். இவரின் இந்த நல்ல மனதை கண்ட மக்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். 

click me!