அடி சக்கை...! வெற்றி பெற்ற மற்றொரு மாணவி சுபிதா ..! அரசியலில் அடுத்தடுத்து அசரவைக்கும் இளசுகள்..!

By ezhil mozhiFirst Published Jan 3, 2020, 5:24 PM IST
Highlights

அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர். இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, வயதில் சிறியவளாக இருந்தாலும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றிபெற செய்து இருக்கிறார்கள். 

அடி சக்கை...! வெற்றி பெற்ற மற்றொரு மாணவி சுபிதா ..! அரசியலில் அடுத்தடுத்து அசரவைக்கும் இளசுகள்..! 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கேஎன் தொட்டி ஊராட்சி. இந்த பகுதியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்லூரி மாணவி ஜெயராணி 1170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இவருடைய தந்தை விஜயசாரதி கேஎன் தொட்டி கிராமத்தில் ஏற்கனவே இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 7 பேரில் அதே ஊரை சேர்ந்த ரவி என்பவரின் மகள் 22 வயதான சுபிதா 720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிபிஏ பட்டதாரியான இவர் சிறு வயது முதலே அனைவருக்கும் உதவி செய்வதில் பெயர் போனவ.ர் அரசினர் கலைக் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர்.

அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர். இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, வயதில் சிறியவளாக இருந்தாலும் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றிபெற செய்து இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் என தெரிவித்து உள்ளார் 

click me!