தமிழகத்திலும் புதிய வகை கொரோனா... வேகமாக பரவுவதால் பீதியில் மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 29, 2020, 10:19 AM IST
Highlights

கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் மக்கள் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதை உறுதிபடுத்துவதற்கான சோதனை புனேவில் நடைபெற்று வருகிறது.

கொரோனாவில் தாக்கம் தற்போது தான் இந்தியாவில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒரு நாளைக்கு 1000 பேர் என்ற குறைவான எண்ணிக்கையில் தான் கொரோனா வழக்குகள் பதிவாகுகின்றன. இந்நிலையில் லண்டனில் ஆர்என்ஏ மாறுதல் கொண்ட திரிபு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதிலும் அவை கொரோனா வைரஸை விட 70% அதிக வேகமாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவித்தது.

இதனால் பல நாடுகள் லண்டனில் இருந்து வரும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் ஞாயிற்று கிழமை வரை லண்டனில் இருந்து வந்த 2,300 பயணிகளில் 1,437 பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து வந்து கொரோனா தொற்று உறுதி செய்யபட்டவர்களில் 6 பேரின் மாதிரிகளில் ஆர்என்ஏ மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த சோதனைகள் நடத்தப்படவில்லை. புனே ஆய்வகத்தில் மத்திய அரசின் கீழ் தான் இவை ஆய்வு செய்யப்படுகிறது. எனவே 6 பேரின் மாதிரிகளும் புனேவிற்கு அனுப்பட்டுள்ளது. எனவே இதற்கான முடிவை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் மக்கள் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!