
பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாகிறது புது விதி...!! பெற்றோர்களும் கவனிக்க வேண்டும்..!!!
முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் தான், கொஞ்சம் வாலுதனத்துடனும், வண்ண உடைகளுடனும் செல்வார்கள்.
ஆனால், தற்போதைய பள்ளி மாணவர்களின் நடை உடை அனைத்தும் மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும் . அந்த அளவுக்கு மாறுதல் வந்துள்ளது மாணவர்களிடையே ,
....!!
பல பள்ளிகளில் ஆசிரியர் சொல்வதை கேட்காமல், அவர்களை மதிக்காமலும் மாணவர்கள் நடந்து கொள்வதை நாம் பார்க்கிறோம்.
இத்தகைய செயல்களை தட்டி கேட்டால், பெற்றோர்களை கூட மதிப்பதில்லை ஒரு சில மாணவர்கள்.....!
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் , பல மாறுதல்களையும், பல புதிய திடங்களையும் விதிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது பள்ளிகல்வித்துறை .........!!!
அதன்படி தற்போது, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புதிய விதிமுறைகள்:
காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.
அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது
மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.
சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.
லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.
கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.
மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.
பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் கடைபிடிக்கபட்டால் தான் , மாணவர்கள் மாணவர்களாகவே இருப்பார்கள்.......!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.