அறிமுகமானது மோடி புகைப்படம் பதித்த சேலை..! சூரத்தில் பரபரப்பு விற்பனை..! பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு...!

Published : Feb 14, 2019, 05:53 PM IST
அறிமுகமானது மோடி புகைப்படம் பதித்த சேலை..! சூரத்தில் பரபரப்பு விற்பனை..! பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு...!

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சூடுபிடித்து உள்ளது.  

அறிமுகமனது மோடி புகைப்படம் பதித்த சேலை..! சூரத்தில் பரபரப்பு விற்பனை..! பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு...! 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சூடுபிடித்து உள்ளது.

வரும் தேர்தலிலும் மத்தியில் பாஜக ஆட்சி பிடிக்குமா என்பதில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் கண்டிப்பாக ஆட்சியை பிடித்தே  தீருவோம் என்ற முழு முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக. அதன் ஒரு கட்டமாக பல்வேறு மாநிலங்களில் சூடுபிடிக்கும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. அமித் ஷா ஒரு பக்கமும், பிரதமர் மோடி ஒரு பக்கமும் தேர்தல் பிரச்சார உரையை பொதுக்கூட்டங்களில் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களை வாழ்த்தி வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே வேளையில் விவசாய பெருமக்கள் முதல் மகளிர் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்தார் மோடி. அதன் ஒரு பகுதியாக  இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பணத்தை மூன்று கட்டங்களாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு விவசாய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது அதேபோன்று பெண்களுக்கு என பல சிறப்பு திட்டங்களையும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் மோடி அலை உதயமாகும் நிலையை கொண்டுவர, அனைத்து மகளிரையும் கவரும் வகையில் தற்போது மோடி படம் அச்சிடப்பட்ட புதுவகையான சேலையை வடிவமைத்து வருகின்றனர் சூரத் வியாபாரிகள்.

மோடி உருவம் பதித்த இந்த வகையான புடவைகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து மற்ற வியாபாரிகளும், சூரத் சென்று மோடி உருவம் பதித்த சேலையை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இதன் மூலம் மேலும் மோடி அலை பெண்கள் மத்தியில் வீச தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்