புதிய கட்டுப்பாடு..! அத்தி வரதரை காண கிளம்பிடீங்களா..? இதை படிக்காம போகாதீங்க..!

Published : Jul 15, 2019, 01:16 PM IST
புதிய கட்டுப்பாடு..! அத்தி வரதரை காண கிளம்பிடீங்களா..? இதை படிக்காம போகாதீங்க..!

சுருக்கம்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக பிரம்மாண்ட விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மிக பிரம்மாண்ட விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. 13 ஆம் தேதியான நேற்று வரை மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் குறிப்பாக வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே பாதுகாப்பு நலன் கருதி வார இறுதியில், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் இவர்கள்  கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தற்போது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுவாமி தரிசன நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், விடியற்காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்குகிறது. பக்தர்களின் வசதிக்காக தற்போது 20 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதால் கூடுதலாக 10 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர 35 கழிப்பறைகள், ஆம்புலன்ஸ், வரிசையில் நீண்ட நேரம் இருக்கும் மக்களுக்கு குடிநீர் என இவை அனைத்தையும் ஏற்பாடு செய்யவும் மும்முரம் காட்டப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் பொன்னையன்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!