
மெனோபாஸுக்கு பிறகு ஏற்படும் பிரச்னை
மாதவிடாய் நின்றவுடன் நீரிழிவு மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்னைகள் பெண்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் அடுத்தடுத்த பாதிப்புகளால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பரம்பரை காரணங்களால், சில சமயங்களில் பெண்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு அல்லது இருதய நோய் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
விழிப்புடன் இருப்பது அவசியம்
மாரடைப்புக்கு எதிராக ஈஸ்ட்ரோஜன் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றபோதிலும், அதை பெண்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோன்று முறையாக எடையை பராமரிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது போன்றவையும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகம். இருதய ஆரோக்கிய விவகாரத்தில் ஆண்களை விட பெண்கள் தங்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு எப்படி ஏற்படக்கூடும்?
இருதயம் சார்ந்த பிரச்னைகளில் குமட்டல் ஏற்படுவது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறியாகும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், தொடர்ந்து இருமல், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு சளியுடன் இரத்தம், வயிற்று வீக்கம், கால் வீக்கம் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. இருதயத் துடிப்பு, படபடப்பு, பந்தயம் போல விரைவாக இருதயம் துடிப்பது போன்றவை அடுத்தக்கட்ட அறிகுறிகளாக உள்ளன. இதையடுத்து தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.