உங்களை தேடி தேடி கடிக்கிறதா கொசு..? அப்படி என்றால் உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Oct 15, 2019, 7:10 PM IST
Highlights

உடற்பயிற்சியின்போது லாக்டிக் ஆசிட் தோல் வெளியேற்றும். இது கொசுக்களுக்கு ரத்தத்தை உறிஞ்ச ஏதுவாக இருக்குமாம். 

உங்களை தேடி தேடி கடிக்கிறதா கொசு..? அப்படி என்றால் உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா..? 

மழைக்காலம்... தொடங்கிவிட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் குறிப்பாக ஐந்து மாவட்டங்களில் டெங்கு தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தி வரும் நிலையில் மிக முக்கிய விஷயத்தை நாமும் தெரிந்திருக்க வேண்டும்

அதாவது நம்மை சுற்றி பலபேர் இருந்தாலும் ஒரு சில சமயங்களில் தன்னை மட்டுமே கொசு அதிகமாக கடிப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அப்போது சிந்தித்து பார்த்தோமேயானால் அதில் உள்ள உண்மை விஷயம் நமக்கு தெரியும். அதாவது "0" வகை ரத்தம் கொசுக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால்தான் "0" வகை ரத்தம் கொண்டவரை ஒருமுறை கடித்துவிட்டு மீண்டும் கடிக்குமாம்.

மேலும் யாருடைய உடல் CO 2 அதிகமாக வெளியிடுகிறதோ அப்படிப்பட்ட நபர்களை கொசு அதிகமாக கடிக்குமாம். அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்க வாய்ப்பு உண்டாம். மேலும் உடற்பயிற்சியின்போது லாக்டிக் ஆசிட் தோல் வெளியேற்றும். இது கொசுக்களுக்கு ரத்தத்தை உறிஞ்ச ஏதுவாக இருக்குமாம். கொசு கடிக்கும் போது, முதலில் தரையில்தான் அமர்ந்திருந்து உற்றுநோக்கி, பின்னர் பறந்துவந்து கடிக்குமாம்.

அதாவது தரையில் இருந்து அமர்ந்து பார்க்கும்போது டார்க் கலர்ஸ் ஆடை கொசு கண்ணில் தென்படும். அதனால்தான் நாம் கருமை கலர் உடை அணிந்து இருந்தால் அதிக அளவு கொசு நம்மை சூழ்ந்து இருக்கும். பெரும்பாலும் நாம் எங்கேயாவது வெளியில் செல்லும்போது கூட விளக்கு வெளிச்சத்தில் நின்றால் தன் தலையை சுற்றி கொசு அதிகமாக இருக்கும்.

காரணம் தலை முடி கருப்பு. இதேபோன்று கருப்பு கருமை நிற உடை அணிந்திருந்தாலும் ஆடையின் மீது அதிகமாக வந்து அமரும். இதேபோன்று உடல் வெப்பம் அதிகமாக கொண்டவர்களின் ரத்தம் அடர்த்தியாகவும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் ரத்தத்தை எளிதில் உறிஞ்ச அதிக வாய்ப்பு இருக்குமாம். எனவே இவர்களை கொசுக்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.இது தவிர மது அருந்துபவர்களையும் கொசு அதிகமாக கடிக்குமாம். 

இதுதவிர உடற்பயிற்சியின் போது உடல் சூடு ஆனாலும் அவர்களை கொசுக்கள் தேடி சென்று கடிக்குமாம். இதன் காரணமாகத்தான் ஒரு சில விஷயங்களை அடிப்படையாக வைத்து அதிக அளவில் கொசுக்கள் கடிப்பதற்கு காரணம் என ஆராய்ச்சியாளர் எப்.டே என்பவர் தெரிவித்துள்ளார்.

click me!