30 ஆயிரம் பேருக்கு மேல் பன்றிக்காய்ச்சல்..! திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published Nov 6, 2019, 2:01 PM IST
Highlights

ராஜஸ்தானில் 208 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 165 பேரும், குஜராத்தில் 151 பேரும் உயிரிழந்தனர் என்று தெரியவந்து உள்ளது.

30 ஆயிரம் பேருக்கு மேல் பன்றிக்காய்ச்சல்..!  திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்..! 

நாடு முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சலால் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 4500 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் அதிர்ச்சி தரும் விதமாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1201 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 239 பேர் இறந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

மேலும் ராஜஸ்தானில் 208 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 165 பேரும், குஜராத்தில் 151 பேரும் உயிரிழந்தனர் என்று தெரியவந்து உள்ளது. அதே போன்று கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்.

click me!