பால் திரிந்து விட்டதா? இனி கீழ கொட்டாதீங்க...? சுவையான பால்கோவா, பன்னீர் ரெடி..!!

By anu KanFirst Published Jan 27, 2022, 8:16 AM IST
Highlights

பால் திரிந்து விட்டதா? இனி கவலை வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே சுவையான பன்னீர், பால்கோவா தயார் செய்யலாம். 

பால் திரிந்து விட்டதா? இனி கவலை வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே சுவையான பன்னீர், பால்கோவா தயார் செய்யலாம். 

நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் ஆகும். பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். பால் நல்லது சரி? ஆனால் பால் திரியும் போது கீழே தானே கொட்ட வேண்டும். அதை எப்படி பயன்படுத்துவது என்ற கேள்விக்கு விடை இருக்கிறது.
 
பால் திரியும் போது புளிப்பாக மாறும், அதை பன்னீர் செய்ய பயன்படுத்தலாம். பதப்படுத்தப்படாத தன்மையாலும், வீட்டிலேயே தயாரிக்கப்படுவதாலும் இந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. 

அதேபோன்று, பால்கோவா செய்யவும் பயன்படுத்தலாம். பால்கோவா செய்வதற்கு தண்ணீரை வடி கட்டி பின்னர், கடாயில் போட்டு 1 கப் சர்க்கரை சேர்த்து,1 ஏலக்காய், 1 டீஸ்புன் நெய் ஊற்றி, கரண்டி கொண்டு பத்து நிமிடம் கிட்டினால் சுவையான பால்கோவா தயார். இருப்பினும், திடமான பகுதியை வெளியே எடுத்தபிறகு, எஞ்சியிருக்கும் தண்ணீரை என்ன செய்வது? பெரும்பாலான மக்கள் அதைத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

ஆனால், அதைச் செய்வதற்குப் பதிலாக, சில எளிதான வழிகளை அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் எஞ்சிய தண்ணீரை வேறு வழியிலும் பயன்படுத்தலாம்.

மாவு பிசைவதற்கு:

பொதுவாக, ரொட்டி, சப்பாத்தி செய்ய மாவை பிசையும் போது, மக்கள் சாதாரண தண்ணீரையே பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கு பதிலாக இப்போது நீங்கள் மாவு பிசைவதற்கு, பால் திரிந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம். இதில் ஊட்டச்சத்தும் நிறைந்திருக்கிறது. அத்துடன், பால் தண்ணீர் உங்கள் ரொட்டியை வழக்கத்தை விட மென்மையாக்கும்.
சாதம் தயாரிப்பதற்கு:

பால் திரியும் போது போதுமான தண்ணீர் இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை சாதம் தயாரிக்க பயன்படுத்தவும். இல்லையெனில், அதில் சிறிது சாதாரண தண்ணீரை சேர்க்கவும். இது சாதத்தின் சுவையை அதிகரிக்கும் மற்றும் புரதங்கள் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்கும். அரிசியைத் தவிர, நூடுல்ஸை வேகவைக்கவும் இந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

காய்கறிகளை சமைக்கும் போது:

காய்கறிகளுடன் குடும்பத்திற்கு ஆரோக்கியமான ஒன்றை சமைக்கும் போது, ​​குழம்பு தயாரிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்தவும். இந்த நீர் உணவில் ஒரு குறிப்பிட்ட ஜிங்கை (zing) சேர்க்கும், மேலும் அதை மிகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றும். பருப்பு மற்றும் தானியங்கள் சமைக்கும் போது, இந்த தண்ணீரையும் பயன்படுத்தலாம். இது உங்கள் உணவை சுவையாக மாற்றும்.

அடுத்த முறை பால் திரியும் அதை கீழே கொட்டாமல், ​​இந்தக் குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள். பால் திரியும் போது, ​​நீங்கள் ரொம்ப கஷ்ட பட வேண்டாம். அதேபோல், தண்ணீரையும் வீசி விடக்கூடாது. எனவே, மேலே சொன்ன வழிமுறைகளை இனிமேல் உங்களது வீட்டில் பயன்படுத்துங்கள் நிச்சயம் பலன் தரும்.
 

click me!