
பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு விசா பெறுவதில் உதவிக்கு செய்த கனிமொழிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார் ஜோதி.
பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா மறுத்தது. இந்த விஷயம் கனிமொழிக்கு தெரியவரவே, ஜோதிக்கு எப்படியாவது விசா வாங்கி தர முயன்று உள்ளார். இதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களுக்காக பேசி விசா வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.
கனிமொழொயின் முயற்சியால், தற்போது பாடகி ஜோதி இங்கிலாந்து சென்று, கலை நிகழ்ச்சியில் பங்குகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழியின் உதவிக்கு நன்றி தெரிவிவிக்கும் பொருட்டு பாடகி ஜோதி நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.