புத்தாண்டு நாளில், நள்ளிரவு ஆலய  தரிசனம்  சரிதானா ?   படித்துவிட்டு  சிந்தியுங்கள் .....!!!

First Published Dec 31, 2016, 1:38 PM IST
Highlights


புத்தாண்டு நாளில், நள்ளிரவு ஆலய  தரிசனம்  சரிதானா ?   படித்துவிட்டு  சிந்தியுங்கள் .....!!!

இன்று இரவு 12  மணிக்கு பிறக்க போகும்   புத்தாண்டை   வரவேற்பதற்காக   உலகமே உற்சாகத்துடன்  காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,  பொதுவாக, புத்தாண்டு என்றாலே நள்ளிரவு  வரை விழித்துக்கொண்டும், சினிமா  சென்று வருவதும்,  கடற்கரைக்கு  போவதும் , நட்சத்திர  ஓட்டல்களில்   ஆடல்  பாடல் என  கொண்டாடுவதும் உண்டு.

அதே சமயத்தில்,    கோவில்  ஆலயங்களில்  வழிபடுபவர்கள்  பலர்.அதுவும் கூட, புத்தாண்டை ஒட்டி, நள்ளிரவு  1 2  மணிக்கு , கோவில்   ஆலயத்தின்  நடை திறந்து  வைப்பது  தர்போது வழக்கமாக  உள்ளது.

ஆனால்,  நடை சாத்தியபின்,  விடியற்காலையில்   தான்  ஆலயங்களில்  நடை திறப்பது  வழக்கம்.

அர்த்த ஜாமத்தில்,  சாமிக்கு  அர்ச்சனைகள்  பூஜைகள்  என  அனைத்தும் செய்கின்றனர்.  இவை அனைத்தும் ஆகம  விதிகளுக்கு  எதிரானது  என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்  பிறப்பு  என்றால் என்ன ?

நாள் பிறப்பு என்பது,  சூரிய   உதயத்தை   வைத்தே  சொல்லப்படுகிறது.அந்த  நேரத்தில்  தான் ,  ஆலயம்  திறக்கப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு , புத்தாண்டு  என்பதற்காக , நள்ளிரவே   ஆலய  நடை திறந்து  வைத்து , பூஜைகளும்  வழிபாடுகளும்  அர்ச்சனைகளும்  செய்வது  ஆகம விதி  அல்ல  எனதான்  சொல்லப் படுகிறது .

நம்  முன்னோர்கள்  எதனை பின்பற்றினார்கள்    என்பதை  நாம் நினைவு கூற வேண்டும். அதற்கு  மாறாக  இவ்வாறு  நள்ளிரவு ஜாமம் ( அர்த்த ஜாம  பூஜை) என்பது  தவறானது .

உதாரணம் :

இயற்கையே   இருளில்  உள்ளது . அதாவது  நள்ளிரவு ....... இந்த  இருள் நேரத்தில்,  கடவுளை  வழிபடுவது  சரிதானா என  நினைத்து  பாருங்கள்.......  

சில கொள்கைகள்  என்றும் நாம்  கடைப்பிடிக்க  வேண்டும் என்பது தான்  பெரியோர்களின்   வழிநடத்தலும்  கூட.......ஆகம  விதியும் அதைத்தான்  கூறுகிறது.

 

 

 

 

click me!