9 மாதத்தில் 5 லட்சம் கிலோ தங்கம் வாங்கிய இந்தியர்கள்

By Selvanayagam PFirst Published Nov 6, 2019, 11:19 AM IST
Highlights

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதத்தில் இந்தியாவில் சுமார் 5 லட்சம் கிலோ மட்டுமே தங்கம் விற்பனையாகி உள்ளதாக உலக தங்க கவுன்சில் தகவல்.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவில்தான் நடைபெறுகிறது. இதனால் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. 

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் சீனாவுக்கு அடுத்து நாம் இரண்டாவது இடத்தில் உள்ளோம். தங்கத்தை ஆபரணமாக மட்டும் பார்க்காமல் சிறந்த முதலீடாகவும் மக்கள் கருதுவதால்தான் இங்க தங்கம் விற்பனை அதிகமாக நடைபெறுகிறது.

2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நம் நாட்டில் 496.11 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் குறைவாகும். 2018 ஜனவரி-செப்டம்பர் காலத்தில் 523.9 டன் தங்கம் விற்பனையாகி இருந்தது. 

கடந்த ஜூன் காலாண்டின் இறுதியில் மற்றும் செப்டம்பர் காலாண்டில் தங்கத்தின் விலை உயர்ந்ததும், பொருளாதார மந்தநிலையால் மக்களிடம் தங்கத்தை வாங்கும் மனநிலை பாதித்ததும் இந்த ஆண்டில் விற்பனை குறைந்தற்கு முக்கிய காரணம் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது.

2019 செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் நம் நாடு 502.9 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் குறைவாகும். 

கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 587.3 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. தங்கத்தை மறுசுழற்சி செய்வதும் இந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 
இந்த ஆண்டில் செப்டம்பர் வரையிலான காலத்தில் 90.5 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் 87 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டு இருந்தது என உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

click me!