
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நேற்று அதாவது மார்ச் 31 தேதியுடன் பலவற்றிற்கு முடுக்கு போட்டுவிட்டது மத்திய அரசு.
இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று பல புதிய திட்டங்களுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் “மத்திய அரசின் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டி.
இந்தியா ஹேக்கத்தான் என்பது தொழிநுட்ப ஆர்வலர்களை ஓர் இடத்தில் திரள செய்து அவர்களை மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்காது தூண்டும் போட்டி தான் ஹேக்கத்தான்.
இதற்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்களிடையே பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உதவியுடன் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான முக்கிய காரணம் அரசின் 29 துறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட உள்ளது.
"ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2017" போட்டி
இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் நாட்டில் முக்கிய துறைகளில் உள்ள பிரச்சனைகளை பதிவிட்டு அதற்கு எப்படி தீர்வு காண்பது குறித்த , அனைத்து பதிவுகளையும் கண்காணிக்கப்பட்டது.
அரசு துறையில் பிரச்னை என்ன ?
இந்திய அரசின் பல முக்கிய துறைகளிலிருந்து சுமார் 598 பிரச்னைகள், சவால்கள் முன் வைக்கப்பட்டன. அதற்கு, நாடு முழுவதும் சுமார் 7,531 குழுக்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 42,000 பேர் தங்களது கருத்துருக்களை பதிவு செய்தனர். அதில், சுமார் 1,266 குழுக்களை சேர்ந்த மாணவர்கள் 10,000 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த இறுதிப்போட்டிகள் நாடு முழுவதும் 26 இடங்களில்,ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று காலை 8 மனியளவில் தொடங்கி நாளை இரவு 8 மணி வரை நடக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் இன்று பிரதமர் மோடி வீடியோ கான்பாரன்சிங் மூலம் பேச உள்ளார்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.