இரவில் "இப்படி குளித்தால்" என்ன ஆகும் தெரியுமா..? ட்ரை பண்ணி தான் பாருங்களேன்..!

 
Published : May 22, 2018, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
இரவில் "இப்படி குளித்தால்" என்ன ஆகும் தெரியுமா..? ட்ரை பண்ணி தான் பாருங்களேன்..!

சுருக்கம்

if we take the headbath at night it will be so excellent feel

இரவில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன  என்பதை பார்க்கலாம். 

பொதுவாக நாம் காலையில்தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவில் தலைக்கு குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன என்பது  நம்மில்  எத்தனை பேருக்கு தெரியும்  

காலையில் தலைக்கு குளிப்பது தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும். இதனால் தலைவலி, சைனஸ் போன்றவையும் தொற்றிக் கொள்ளும்.

ஆனால் இரவில் தலைக்கு குளிப்பதால் அப்படியில்லை. பல நன்மைகள் உண்டாகின்றன. அவ்ற்றைப் பற்றி இங்கு காண்போம்.

நிதானமாக தலையை சுத்தம் செய்யலாம்

காலையில் குளிக்கும்போது தலைமுடியை சரியாக அலச முடியாது. ஆனால் இரவில் அழுக்கு போக நிதானமாக தலைமுடியை அலசலாம்.

இயற்கை சரும எண்ணெய்

இரவில் தலைக்கு குளிக்கும்போது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அவகாசம் கொடுக்கிறோம். இதனால் வறட்சியின்றி வெடிப்பின்றி கூந்தல் பாதுகாக்கப்படும்.

சூரிய ஒளி பாதிப்பு

தலைக்கு குளித்ததும் கூந்தல் மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த சமயங்களில் சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படும்.

சிகை அலங்காரம்

காலையில் தலைக்கு குளித்த பின் செய்யப்படும் சிகை அலங்காரத்தால் கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இரவினில் அதனை அப்படியே விடுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதில்லை.

சைனஸ், தலைவலி இல்லை

இரவில் தலைக்கு குளிக்கும்போது நன்றாக துவட்டுவீர்கள். இதனால் நீர் தலையில் தங்கும் வாய்ப்பில்லை. இதனால் நீர் கோர்க்கும் பாதிப்பு உண்டாகாது

 மேலும், நல்ல உறக்கம் வரும்.

மேலும், இரவில் தலைக்கு குளிப்பதால் நல்லது என்பதற்காக தலைக்கு குளித்த  உடனே உறங்க கூடாது. மெதுவாக கூந்தலை நன்கு துவட்டி விட்டு, ஈரம்  காய்ந்த உடன் குளித்தால் உறக்கம் அப்படி வரும்...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!