
நன்கு படித்த திறமை வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே அதிக சம்பளத்தில் வேலை கிடைகிறது . ஆனால் சோம்பேறித்தனமாக எந்த வேலையும் செய்யாமல் 3 மாதங்களுக்கு எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருக்கும் எண்ணம் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம் .
அதாவது,பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மைக்ரோ கிராவிட்டி தொடர்பான ஆராய்சிக்காக , 3 மாதங்கள் விஞ்ஞானிகள் சொல்லும் இடத்திலேயே உறங்க வேண்டுமாம் .அவ்வாறு தூங்கும் போது உடல் அசைவில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பார்கள்.
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணபிக்க சில கண்டிஷன் கூறப்பட்டுள்ளது . அதன்படி, 2௦ வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என்றும், மது மற்றும் புகை பழக்கம் இருக்கக்கூடாது என்றும் கூறப் பட்டுள்ளது .
இதற்காக தேர்வாகும் நபருக்கு மூன்று மாத சம்பளமாக 11.20 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்
இதற்கு விண்ணபிக்க உலகம் முழுவதும் பல விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது . இதற்கான விவரத்தை டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.