ரூ 2000  நோட்டை  ஸ்கேன்  செய்தால் மோடி  பேசுகிறாரா......!!! உண்மை என்ன ....?

First Published Nov 25, 2016, 5:39 PM IST
Highlights


ரூ 2000  நோட்டை  ஸ்கேன்  செய்தால் மோடி  பேசுகிறாரா......!!! உண்மை என்ன ....?

Modikeynote என்ற Appஐ உங்கள் மொபைலில் install செய்து,  பிறகு அதை பயன்படுத்தி புதிய 2000ரூபாய் நோட்டை scan செய்தால் அந்த நோட்டில் உள்ள பல அம்சங்களை தீவிரமாக ஆரய்ந்து பிறகு நமது பிரதமர் மோடி,  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருகிறது என்ற தகவல்  தற்போது  வைரலாக பரவி வருகிறது.

ஆகா ...என்ன ஒரு டெக்னாலஜி என  பலரும்  வியக்கும்  நேரத்தில்....இதில்  என்ன  இருக்கிறது  என  பாப்போம்...!

அதாவது, இந்த ஆப் மூலம், பழைய 1000, 500,100,50, 20,10 ரூபாய் எல்லாவற்றையும் Scan  செய்தாலும்,  பிரதமர் மோடி  அவர்கள்  பேசுவது  வருகிறது. அதாவது,எல்லாவற்றிலும் மோடி பேசுகிறார்..

கடைசியில் ஒரு வெற்றுத்தாளை SCAN செய்தால் கூட மோடி அவர்கள்  பேசுவது  வருகிறது....

இந்த  ஆப் பின்னணி  என்ன ?

அந்த APPல்  உள்ள scan பட்டனை தொட்டவுடன் You tubeல் உள்ள மோடியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு  Play ஆகிறது..அவ்வளவுதான்.

2000 ரூபாய் நோட்டை செக் பண்ண பயன்படும் என்று நம்பி லட்சக்கணக்கானோர் இதை download செய்வார்கள்.

யாரோ சிலர் அல்லது சில நெட் ஒர்க்குகள் பயனடையும்..

இந்த App ல் பிரதமர் போட்டோதான் Logo ஆக இருக்கிறது..

பிரதமரின் போட்டைவையும், பேச்சையும் தவறாக பயன்படுத்தி போலி App தயாரித்து  உள்ளார்கள்.

இன்னும்  தீவிரமா  பார்த்தால், அதன் Disclaimer ஐ படிக்கும் போது,  " This app is for fun " என்று போட்டிருக்கிறான் புத்திசாலி திருடன்.

இதெல்லாம் தெரியாமல், புதிய  2000ரூபாயில் இது புது டெக்னிக்  என்று , சமூக  வலை தளங்களில்  இந்த  விவகாரம்  மிகவும்  தீவிரமாகவும், ஆர்வமாகவும்  பலரும்  பகிருகிறார்கள்.....!

 

click me!