மே 15 ஆம் தேதி "பூமி வசிய நாள்"...! சொந்த வீடு வாங்க இந்த தினத்தில் தான் கல்லடுக்க வேண்டுமாம்...!

Asianet News Tamil  
Published : May 08, 2018, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
மே 15 ஆம் தேதி "பூமி வசிய நாள்"...! சொந்த வீடு வாங்க இந்த தினத்தில் தான் கல்லடுக்க வேண்டுமாம்...!

சுருக்கம்

if we do this sure we will get the own home in this year

மே 15 ஆம் தேதி "பூமி வசிய நாள்"...! இன்றைய தினத்தில் இதை செய்தால்  விரைவில்  உங்களுக்கு சொந்த வீடு..!

சொந்த வீடு வாங்க...மே  15 ஆம் தேதி கடவுள் வழிபாடு செய்தல் நல்லது. அதாவது மகாகவி சுப்ரமணிய பாரதியார் கூடப "காணி நிலம் வேண்டும் சக்தியே என பாடி இருப்பார் 

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்...என்ற பழமொழி இருக்கும் அல்லவா..? அதாவது நமக்கென சிறிய இடமாக இருந்தாலும் தனி இடம்  இருந்தால் மன நிம்மதியோட  தைரியமான வாழ்க்கை வாழ முடியும்.

எனவே சொந்த வீடு வேண்டும் என்பவர்கள், பூமி வசிய நாளான மே 15 ஆம்  தேதி பூஜை செய்ய வேண்டும்  

பூமி வசிய நாள்:

நமது இல்லத்திலும், நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் மலை சார்ந்த இடத்தில் உள்ள கோவிலில் அல்லது கோவிலுக்கு அருகாமையில் இந்த வழிபாட்டை  செய்தல் நல்லது

வரும் மே 15 ஆம் நாள் பூமி வசிய நாள் வருகிறது. இன்றைய தினத்தில்,  ஜோதிட ரீதியாக செவ்வாய் வாரத்தில் பரணி கிருத்திகை விசாகம் அஸ்தம்  இந்த நட்சத்திரங்களில் நான்காம் பாதத்தில் கடகம் லக்னம் அமைய...அன்றைய தினத்தில் மண்ணை வணங்கினால், பூமி விருத்தி ஆகும் என்பது ஐதீகம். இதை தான் பாரம்பரிய ஜாதகம் சொல்கிறது.

எந்த நிலத்தை வாங்க போறோமோ அந்த நிலத்தில் இருந்து ஒரு கைமண்  அளவு மண் எடுத்து அத்துடன் பச்சை கற்பூரத்தை கலந்து, ஒரு சிகப்பு கலர் துணியில் வைத்து அத்துடன் 11 ரூபாய் ரூபாய் நாணயங்களை சேர்த்து  வைக்கவும்.

பின்னர் அதனை கையில் வைத்தவாறு, "ஓம் ரிங் வசி வசி"  என்ற மந்திரத்தை  சொல்ல  வேண்டும்.

விளம்பி வருடம் வைகாசி மாதம் முதல் தேதி செவ்வாய்கிழமையான, வரும் 15  ஆம் தேதி 10.17  மணி முதல் 10.27 குள், நீங்கள் ஓம் ரிங் வசி வசி என்ற  மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லி வர  வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், அதிகபட்சமாக ஒரு வருடத்திற்குள் நாம் வாங்க வேண்டும் என நினைத்த இடத்தை வாங்கக்கூடிய யோகம் வரும் ஐதீகம்.

இதே போன்று, எந்த  இடத்தை வாங்க போறோமோ அதன் போட்டோவை பூஜை அறையில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி வர நல்ல மாற்றம் இருக்கும். கூடிய விரைவில் அந்த இடம் உங்களுக்கு கிடைக்கும் மேலும், அந்த  போட்டோவின் மீது வலம்புரி சங்கை வைத்து கூட வணங்கி வரலாம்.

கல் மீது கல் வைத்து அடுக்குவது:

சில கோவில்களில், பக்தர்கள்  சில வேண்டுதலை முன் வைத்து கல் மீது கல் வைத்து அடுக்குவார்கள்... அதாவது, வாழ்வில் ந நல்ல முனேற்றம் அடைந்து, விரைவில் வீடு கட்ட வேண்டும் சொத்து வாங்க வேண்டும் என  நினைத்துக் கொண்டே இதனை செய்வார்கள்....

ஆனால் இதனை வரும் மே 15  ஆம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது  பலருக்கும் தெரியாத ஒன்று.

ஆண்டில் ஒரு முறை வரும் இந்த பூமி வசிய நாளில் தான், இதை செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்டிப்பாக நாம் விரும்பும் வீடு வாங்கியே  தீருவோம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

உங்க தலையெழுத்தையே மாற்றும் 9 பொருட்கள்! மாட்டுக்கு கொடுத்தாலே கிரக தோஷம் காணாமல் போகுமாம்!
கடுமையான முடி உதிர்வுக்கு வலுவான டாபிக்கல் சிகிச்சைகள் எவ்வாறு உதவுகின்றன?