
ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்சிடாசின் எனப்படும் ஹார்மோன் வெளிவருகிறது.
இந்த ஹார்மோன் உடனே மூளைக்கு ஒரு தூண்டுதை ஏற்படுத்தி, மூளையானது உடலை ரிலாக்ஸ் ஆக இருக்க கட்டளை இடும். எனவே நம் உடலானது நல்ல ஆரோகியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
நோய்த்தொற்றுகள் வராமல் பாதுகாக்கப்படும்
அடிக்கடி அல்லது தினமும் உடலுறவு கொள்வதால் நோய்த்தோற்று வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அதாவது நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்து எந்த நோய் தோற்றும் வராமல் இருக்கும் .
நிம்மதியான உறக்கம்
உடலுறவின் முடிவில் ஆக்சிடாஸின் வெளியிடப்படுவதால், நல்ல உறக்கம் வரும்...
இதயத்தின் செயல்பாடு சீராக இருக்கும்
அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் ரத்த நாளங்கள் சீராக இயங்குவதால், இதயம் நல்ல செயல்பாட்டுடன் ஆரோக்கியமாக இருக்கும்
ஹார்மோனல் பிரச்சனை
உடலில் தோன்றும் ஹார்மோனல் பிரச்சனை காரணமாக குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதவிடாய் ஏற்படாமல் சற்று தள்ளி வரலாம். அல்லது சரியான சுழற்சி இல்லாமல் முன்னதாகவே நிகழலாம்.
ஆனால் தினமும் அல்லது ஒருநாள் இடைவெளி விட்டு தாம்பத்யத்தில் ஈடுபட்டு வந்தாலும் இந்த பிரச்சனை சரியாகி விடும். இதற்காக மருத்துவமனை சென்று சிகிச்சை என்ற பெயரில் பல ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு, மெல்லிய அழகான உடலமைப்பையும் குண்டாக்கி உடல் நலுனும் பாதிக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்
வயிற்று வலி குறையும் தினமும் உடலுறவில் ஈடுபடுவதால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக படியான வயிற்றுவலி குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
வலுவாகும் இடுப்புத்தசைகள்
மேலும் தினமும் உடலுறவில் ஈடுபடுவதால், பெண்களின் இடுப்புத் தசைகள் நன்றாக வலுவடைந்து, கர்ப்பகாலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
முதுகிற்கு வலு சேர்க்கும் பொதுவாகவே பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள் அல்லவா..?
ஆனால் உடலுறவு கொள்வதால், பெண்களுக்கு முதுகு வலி பறந்து போகும், அதுவும் குறிப்பாக கீழ் முதுகு அவ்வளவு நன்மை பயக்கும்.
பக்கவாதம் வராதுங்கோ..!
வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறைக்கு மேல் தாம்பத்யத்தில் ஈடுபட்ட ஆண்களை விட, தினமும் தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு பக்கவாதம் வருவது கிடையாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எலும்புத்தேய்மானம்
பெண்களுக்கு மிக எளிதில் வரக்கூடியது எலும்புத் தேய்மானம்.
ஆனால் தாம்பதயத்தில் தினமும் ஈடுபடுவதால், எலும்புகளின் வலிமையும் கூடி எலும்புத்தேய்மானம் என்பது வராது. இதனை ஆஸ்டியோபரோசிஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
முதுமையை தடுக்கும்.
உடலுறவுக்கு பின், நல்ல உறக்கம் கிடைப்பதால் நம் முகம் நன்றாக பிரகாசமாக காட்சி அளிக்கும். மேலும் முதுமை தோற்றம் காணப்படாது
உடற்பயிற்சி செய்வதும் ஒன்று....தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் ஒன்று...
அதாவது, தினமும் எப்படி உடற்பயிற்சி செய்து உடம்பை பிட்டாக வைத்துகொள்ள விருப்பம் கொள்கிறோமோ அதே போன்று அரை மணி நேரம் உடலுறவுக்கு நேர்த்தை ஒதுக்கினால் நம் உடல் நல்ல வலிமையாகவும் பிட்டாகவும் காணப்படும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது
பிராஸ்டேட் புற்றுநோய்
ஆண்களின் இனபெருக்க மண்டலத்தில் உள்ளது தான் பிராஸ்டேட் சுரப்பி. இந்த சுரபியில் விந்தணு தேங்கி பிராஸ் டேட் புற்றுநோயை ஏற்படுத்தும்.
இது போன்று நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், தினமும் உடலுறவு கொள்ள வேண்டும்... இவ்வாறு உடலுறவு கொள்ளும் போது விந்தணுக்கள் பிராஸ்டேட் சுரப்பியில் இருந்து சரியான இடைவெளியில் வெளியேறி விடும். எனவே பிராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் உடலுறவு கொள்ளும் போது, உடலின் இயக்கங்கள்
சீராக்கப்பட்டு நோய்எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும்
மன அழுத்தம் வராது
உடலுறவு கொள்ளும் போது டோபமைன் என்னும் மன அழுத்தத்தை எதிர்த்துப்போராடும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விறைப்புதன்மை பிரச்சனை வராது ஆண்களை பொறுத்தவரை விறைப்பு தன்மை பிரச்சனை வராமல் இருக் வேண்டும் என்றால், ஆணுறுப்பில் நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். நல்ல ரத்த ஓட்டம் வேண்டும் என்றால் நாள்தோறும் உடலுறவில் ஈடுபடுவது ஆக சிறந்தது
தலைவலி அடிக்கடி வருபவர்களுக்கு இனி அந்த பிரச்சனை வராமல் இருக்க, உடலுறவில் ஈடுபடுவது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.