போர் வந்தால் 10 நாட்களில் துவம்சம் பண்ணிடுவோம்..! பாகிஸ்தானை அலற விட்ட மோடி..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 29, 2020, 11:35 AM IST
போர் வந்தால் 10 நாட்களில் துவம்சம் பண்ணிடுவோம்..! பாகிஸ்தானை அலற விட்ட மோடி..!

சுருக்கம்

டெல்லியில் நடந்த தேசிய மாணவர் படையின் பேரணி அணிவகுப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். பூடான் நேபாளம் ரஷ்யா நாடுகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பலர் சாகச விளையாட்டுகளையும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் செய்து காட்டினார் மாணவர்கள். 

போர் வந்தால் 10 நாட்களில் துவம்சம் பண்ணிடுவோம்..! பாகிஸ்தானை அலற விட்ட மோடி..!  

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் இந்திய படைகள் பத்து நாட்களில் வெற்றி பெற்றுவிடும் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

டெல்லியில் நடந்த தேசிய மாணவர் படையின் பேரணி அணிவகுப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தார். பூடான் நேபாளம் ரஷ்யா நாடுகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பலர் சாகச விளையாட்டுகளையும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் செய்து காட்டினார் மாணவர்கள். 

மேலும் என்சிசி பிரிவில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர், இன்றைய இளைஞர்களால் நாடு முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தீவிரவாதிகளை அவர்கள் எங்கு உள்ளார்களோ அங்கேயே சென்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு தயாராக உள்ளதாகவும், மறைமுகமாக பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் நடத்த முயற்சி செய்து வருகிறது, ஒருவேளை போர் ஏற்பட்டால் ஒரு வாரம் முதல் 10 நாட்களில் அவர்களை தாக்கி வெற்றி பெற்று விடுவோம் என தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதற்கு முன்னதாக மத்தியில் ஆட்சி செய்தவர்கள் எல்லை தாண்டி தாக்குதலை நடத்த எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், ஆனால் சமீபத்தல் நடந்த இரண்டு தாக்குதல் மூலமாக காஷ்மீர் மக்களுக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி.

மேலும் தீவிரவாதம் ஏற்கனவே கட்டுக்குள் இருக்கிறது. மீண்டும் வேறு எங்கு தீவிரவாதம் இருந்தாலும் அந்த இடத்திற்கே சென்று தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி 

இதற்கு முன்னதாக மத்தியில் ஆட்சி செய்தவர்கள் எல்லை தாண்டி தாக்குதலை நடத்த எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு தாக்குதல் மூலமாக காஷ்மீர் மக்களுக்கு மிகப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திரமோடி தீவிரவாதம் ஏற்கனவே கட்டுக்குள் இருக்கிறது மீண்டும் வேறு எங்கு இருந்தாலும் அந்த இடத்திற்கே சென்று தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்