துருப்பிடித்த பாத்ரூம் பைப் 10 நிமிஷத்தில் புதுசாக மாற இத ஃபாலோ பண்ணா போதும்!

By Kalai Selvi  |  First Published Nov 16, 2023, 12:46 PM IST

உங்க வீட்டு பாத்ரூம் பைப் துருப்பிடித்து இருந்தால் அவை பளிச்சென்று மாற்ற இந்த எளிய குறிப்புகளை பின்பற்றவும்.


பொதுவாக நம் வீட்டில் வாங்கும் ஒவ்வொரு பொருளும் வாங்கின கொஞ்ச நாளில் மட்டும் தான் புதிதாக இருக்கும். பிறகு நாளடைவில் அவை பழசு போல மாறி விடுகிறது. அதற்கு காரணம் பல இருந்தாலும், முக்கியமானது நாம் அவற்றை சரியாக பராமரிக்காததுதான் என்று சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் இரும்பு. 

ஆம்., இரும்பு பொருட்களை நாம் சரியாக பராமரிக்காவிட்டால் அவை துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். அதிலும் குறிப்பாக பாத்ரூம் பைப்பை ஒழுங்காக பராமரிக்காவிட்டால், அவை 
எளிதில் துருப்பிடித்து விடும். இன்னும் சொல்லப்போனால், சாதாரணமாக இருக்கும் பாத்ரூம் பைப்புகளை சுத்தம் செய்வதை நாம் கடினமாக உணருகிறோம். அதிலும் துருப்பிடித்த பாத்ரூம் பைப்புகளை சுத்தம் செய்வது எவ்வளவு கடினம், நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  கிச்சன் சிங்க் நாற்றத்தை போக்க சில சூப்பரான டிப்ஸ்கள் இதோ..!!

மேலும் பாத்ரூம் சுத்தமாக இல்லாவிட்டால் நம் ஆரோக்கியத்திற்கு கேடுகள் பல வரும் எனவே எப்போதும் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தவகையில், இத்தொகுப்பின் நாம் துருப்பிடித்த பாத்ரூம் பைப்புகளை சுலபமான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..

இதையும் படிங்க:  ஒரே ஒரு பொருள் போதும்.. இதை போட்டு வீட்டை துடைத்து பாருங்க.. எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை கிடையாது

துருப்பிடித்த பாத்ரூம் பைப்பை பளிச்சென்று மாற்ற சூப்பரான டிப்ஸ்:

வினிகர்:

இதற்கு முதலில் சம அளவு வினிகர் மற்றும் தண்ணீர் எடுத்து, அவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர் அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி துருப்பிடித்த பைப்பின் மீது தெளிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து பேக்கிங் சோடா அல்லது சலவை பொடி உதவியுடன் அந்த இடத்தை நன்கு தேய்க்க வேண்டும். இப்போது கரை நீங்கி பளிச்சென்று இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலுமிச்சை:

முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சம் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை ஒன்றாக கலக்கி துருப்பிடித்த பாத்ரூம் பைப் மீது தெளித்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவை நன்கு ஊறிய பிறகு ஸ்க்ரப்பர் வைத்து துருப்பிடித்த இடத்தை நன்றாக தேய்க்க வேண்டும். இவற்றுடன் வினிகர் மற்றும் சிறிதளவு ஷாம்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இப்போது கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும்.

மேலும் உங்கள் வீட்டு பாத்ரூமில் உப்பு கறைகள் இருந்தால் அவற்றை சுத்தம் செய்யவும் இந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

click me!