உதட்டோட ஷேப்ப வச்சு இதெல்லாம் தெரிஞ்சுக்கலாமா? ஜெயம் ரவி சொன்ன லிப்பாலஜி இதான் போல - முழு விவரம்!

By Ansgar R  |  First Published Sep 1, 2023, 7:06 PM IST

மனிதனின் கை ரேகையை வைத்து அவரது எதிர்காலத்தை கணிப்பதை பற்றி நாம் பல முறை கேட்டிருப்போம், ஏன் நம்மில் பலர் கை ரேகை ஜோசியமும் பார்த்திருப்போம். சரி இது ஒருபுறம் இருக்க மனிதனின் உதடுகளை வைத்துகூட அவர்களுடைய குணத்தை பற்றி கூறலாம் என்கிறது ஒரு ஆய்வு. சரி இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.


லிப் ஷேப் பெர்சனாலிட்டி டெஸ்ட், அதாவது உங்கள் உதடுகள் உங்கள் ஆளுமை பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன? என்பதை தெரிவிப்பது தான் அது. இதை தெரிந்துகொள்ள உங்கள் உதடுகளை இரு வகைப்படுத்துகின்றனர், ஒன்று மெல்லிய உதடுகள், மற்றொன்று முழு அல்லது பெரிய உதடுகள். இதை கொண்டு தான் இந்த பெர்சனாலிட்டி டெஸ்ட் செய்யப்படுகிறதாம்.

பொதுவாக உதடுகள் என்பது மனிதனின் மிகவும் வசீகரமான ஒரு உடல் பாகம், சரி உங்களுக்கு மெல்லிய உதடுகள் இருந்தால் நீங்கள் எப்படிபட்டவர் என்பதை பின்வருமாறு காணலாம். 

Tap to resize

Latest Videos

உங்களிடம் மெல்லிய உதடுகள் இருந்தால், நீங்கள் மிகவும் சுதந்திரமாகவும் தன்னிறைவு பெற்றவராகவும் காணப்படலாம். பேசுவதை விட கேட்பது உங்களுக்கு அதிக மண் அமைதியை தருமாம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உங்கள் குறைவாக இருக்கலாம். 

இனி ஆபரேஷன் வேண்டாம்.. மருந்து வேண்டாம்.. கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள் இதோ..!!

நீங்கள் பெரும்பாலும் அதிக பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியானவராக காணப்படுகிறீர்கள். சிக்கலைத் தீர்ப்பதிலும், முடிவெடுப்பதிலும் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். நீங்கள் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். நீங்கள் பெரும்பாலும் தனிமையில் உங்கள் நேரத்தை செலவழிக்க முனைவீர்கள் என்று கூறுகின்றனர்.

அதுவே உங்களுக்கு பெரிய அல்லது தடிமனான உதடுகள் இருந்தால்..

நீங்கள் பாசமுள்ள, அக்கறையுள்ள மற்றும் நம்பிக்கையுடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் சொந்த தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்களாம். அதே போல மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும் பதிலளிப்பதிலும் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள். 

நீங்கள் விரும்புவதைப் பின்பற்ற மற்றும் அதை செயல்படுத்த நீங்கள் பயப்பட மாட்டீர்கள். சில நேரங்களில், நீங்கள் பிடிவாதமாகவும், கருத்துடையவராகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில் உங்கள் மனதை மாற்றிக்கொள்ள நீங்கள் மறுபவர்களாக திகழ்வீர்கள். நீங்கள் ஒரு அன்பான மற்றும் அக்கறையுள்ள பெற்றோராகவும் திகழ்வீர்கள்.

வாராஹி அம்மனை இந்நாட்களில் வழிப்பட்டால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

click me!