கருப்பாக இருக்கும் கடாயை புதிது போல் மாற்ற வேண்டுமா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க..

கருப்பாக இருக்கும் உங்கள் கடாயை எப்படி எளிதாக சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


நம் சமயலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் என்றால் அது சமையல் பாத்திரங்கள் தான். ஆனால் தொடர்ந்து அதிக தீயில் சமைக்கப்படுவதால் சில பாத்திரங்களின் நிறமே மாறிவிடுகிறது. குறிப்பாக கடாய் அல்லது வாணலி போன்ற பாத்திரங்கள் சில நேரங்களில் சமைக்கும் போது அடிப்பிடிப்பதால் அவற்றின் நிறமே மாறிவிடுகிறது. மேலும் கடாயின் தூய்மையை நாம் முறையாக பராமரிக்கவில்லை எனில் அது காலப்போக்கில் கருப்பு நிறமாக மாறிவிடும்.

எனவே கடாய்களை நாம் சமைத்த உடனேயே நன்றாக சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் பின்னர் சுத்தம் செய்வதில் சிரமம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பாக இருக்கும் உங்கள் கடாயை எப்படி எளிதாக சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Videos

தேவையான பொருட்கள்

  • மூன்று தேக்கரண்டி காஸ்டிக் சோடா
  • 2 தேக்கரண்டி சிட்ரிக் அமிலம்
  • ஸ்டீல் ஸ்க்ரப்பர்
  • சோப்பு தூள்

பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்வது

  • பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு முன் கையுறைகளை அணியுங்கள். கடாயை சுத்தம் செய்வதற்கு முன், ஒரு வாளியில் போதுமான தண்ணீரை நிரப்பவும், அது அழுக்கு பாத்திரத்தை மூழ்கும் படி போட்டு வைக்க வேண்டும்.
  • இப்போது தண்ணீரில் காஸ்டிக் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பாத்திரத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.அடுத்த நாள் கடாயை சுத்தம் செய்ய பேஸ்ட் செய்யவும்.
  • ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் காஸ்டிக் சோடா, ஒரு ஸ்பூன் சோப்பு பவுடர், இரண்டு ஸ்பூன் சிட்ரிக் அமிலம் மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீரை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை பாத்திரத்தை சுற்றி தடவி 15 நிமிடங்கள் விடவும்.
  • 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, கடாயில் அழுக்கு நுரையாகி, தெரியும்.
  • இப்போது ஒரு ஸ்க்ரப்பரின் உதவியுடன் கடாயை ஸ்க்ரப் செய்யத் தொடங்குங்கள்.
  • சிறிது நேரம் நன்றாக தேய்த்த பிறகு, சுத்தமான தண்ணீரில் கழுவி, கடாயை உலர வைக்கவும்.
  • இப்போது கடாயில் இரண்டு அல்லது நான்கு துளிகள் எண்ணெய் சேர்த்து நன்றாக தடவவும். எண்ணெய் தடவுவது கடாயின் மென்மையை பராமரிக்கிறது.

எனினும் நீங்கள் நான்ஸ்டிக் பாத்திரத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்றால், கூர்மையான ஸ்டீல் ஸ்க்ரப்பரைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு ஸ்க்ரப்பரின் விளிம்பு நான்-ஸ்டிக் பானை சேதப்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.

click me!