Today astrology: கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்...கஜகேசரி யோகம் பெறும் 5 ராசிகள் ...இன்றைய ராசி பலன்!

By Anu Kan  |  First Published Mar 18, 2022, 6:07 AM IST

Today astrology: ஜோதிட சாஸ்திரன்படி, கிரகம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது, அதன் பாதிப்பு  அனைத்து ராசிகளிலும் ஏற்படும்.


ஜோதிட சாஸ்திரன்படி, கிரகம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது, அதன் பாதிப்பு  அனைத்து ராசிகளிலும் ஏற்படும். இருப்பினும், சிலருக்கு அது மகிழ்ச்சியை தரும்.சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தும். அவை யார் யாருக்கு என்னென்னெ பலன் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம், நிதி நிலை உயர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றை தருபவரான சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு  கஜகேசரி யோகம் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

கஜகேசரி யோகம்:

கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். இந்த யோகம் பெற்ற ஒருவர் ஒரு வலிமை பெற்ற யானை போன்று அனைத்து தடங்கல்களையும், தர்த்து எறிந்துவிடுவார். அது தான் இந்த கஜகேசரி யோகத்தின் வலிமை ஆகும்.

அதன்படி, சுக்கிரன் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 வரை கும்ப ராசியில் சஞ்சாரிக்க உள்ளார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அளப்பறிய நன்மை பயக்கும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க....Today astrology: மார்ச் 27 முதல் குரு உதயம்....ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!

மேஷம்:

சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசியில், வருமான ஸ்தானத்தில் அமையும். இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் மேஷ  ராசிக்காரர்கள் இப்போது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். தொழில், வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக அமையும். பண வரவு சாதகமாக இருக்கும். இது தவிர வியாபாரத்தில் தொடர் வளர்ச்சி இருக்கும். இந்த கால கட்டத்தில் எந்த வேலை செய்தாலும் பலன் கிடைக்கும்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். இந்த பயணம் லாபகரமானதாக அமையும். 

சிம்மம்:

சுக்கிரனின் சஞ்சாரம் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டுத் தொழிலில் அபரிமிதமான பண லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு  புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில், கடின உழைப்பின் பலனை முழுமையாக பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண காரியங்கள் வெற்றியை தரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நிதி நிலை இன்னும் சிறப்பாக இருக்கும். 

மகரம்:

இந்த ராசிக்கு செல்வ வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் பெரிய சாதனைகளை செய்வீர்கள்.உத்தியோகத்தில் சம்பளம் உயரும் வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் நிதி ஆதாயம் முன்பை விட சிறப்பாக இருக்கும். மேலும், கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு  சுக்கிரன் சஞ்சாரம் நன்மை தரும். அவர்களின் வருமானமும் கூடும். திடீரென்று மீன ராசிக்காரர்களுக்கு பல இடங்களிலிருந்து பணம் வரக்கூடும். வெறும் பேச்சின் மூலமே பெரிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகளால் பொருளாதார பலன்கள் உண்டாகும்.

கும்பம்:

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட பணம் வருவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. பெயர்ச்சி காலத்தில், அனைத்துத் தரப்பிலிருந்தும் நிதிப் பலன்கள் கிடைக்கும். இது தவிர, இந்த காலகட்டத்தில் முதலீடு பணத்திற்கும் பயனளிக்கும். புது வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

மேலும் படிக்க....Today astrology: 30 ஆண்டுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசிக்கு வருகை...இந்த 5 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பார்ட்!

click me!