2019 ராசிப்பலன்..! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்...!

Published : Dec 13, 2018, 02:06 PM ISTUpdated : Dec 13, 2018, 02:17 PM IST
2019  ராசிப்பலன்..! அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்...!

சுருக்கம்

ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்களது கிரக நிலையை பொருத்து, பிறக்க போகும் புத்தாண்டு எப்படி அமையும் என்பதை கூற முடியும். அதன்படி, கன்னி, விருச்சகம், தனுசு ஆகிய மூன்று ராசியினருக்கு வரும் புத்தாண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.  

ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்களது கிரக நிலையை பொருத்து, பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி அமையும் என்பதை கூற முடியும். அதன்படி, கன்னி, விருச்சகம், தனுசு ஆகிய மூன்று ராசியினருக்கு வரும் புத்தாண்டு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.

முதலில் கன்னி ராசியை பற்றி பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் மட்டுமே மிகவும் நார்மலாக இருக்கும். எப்போதும் உள்ளது போலவே நாட்கள் செல்லும். ஆனால் அதன் பின்னர் வரும் மாதமான பிப்ரவரி முதல் ஆண்டு முழுக்க அதிர்ஷ்ட மழை கொட்டும் என்கிறது ராசிப்பலன்.

எப்போதும் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் உங்களது வலிமையான முயற்சி, உறுதியான நம்பிக்கையோடு பயணிக்கும் உங்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு மிக அருமையாக அமையும் 
ஆக மொத்தத்தில், கடின உழைப்பால் உங்கள் வேலையிலும் சரி, காதல் வாழ்க்கையிலும் சரி வெற்றி தான் வரும் புத்தாண்டு.

விருச்சகம்    

விருச்சக ராசியினரே, உங்களுக்கு இந்த ஆண்டு ஒரு மாயாஜால ஆண்டாக அமைய உள்ளது. வரும் புத்தாண்டில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என நினைத்து உழைப்பை போடுகிறீர்களோ. கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு என்ன வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை கட்டாயம் வாங்கியே தீர்வீர்கள்

தனுசு

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மனைவி வழியில் கொஞ்சம் தகராறு இருந்து வந்த நிலையில் வரும் ஆண்டு பெரிய மாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். இப்போது நடப்பது எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டு சென்றால் வரும் ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும். இதுவரை தாங்கள் சந்தித்து வந்த பல பிரச்சனைகளுக்கு வரும் ஆண்டு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!