தமிழகத்தில் கனமழை பெய்யப்போகும் மாவட்டங்கள் அறிவிப்பு..!உங்க மாவட்டம் இருக்கா பாருங்க மக்களே...!

By ezhil mozhiFirst Published Sep 3, 2019, 5:12 PM IST
Highlights

கனமழை பொருத்தவரையில் நீலகிரி கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கனமழை பெய்யப்போகும் மாவட்டங்கள் அறிவிப்பு..!உங்க மாவட்டம் இருக்கா பாருங்க மக்களே...! 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்ப சலனம் மற்றும் வங்கக்கடல் பகுதியில் காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்ட காரணத்தினால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தஞ்சாவூர் கன்னியாகுமரி பெரம்பலூர் அரியலூர் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கனமழை பொருத்தவரையில் நீலகிரி கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 6 சென்டி மீட்டர் மழையும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான தூரல் வர வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் சென்னையை பொருத்தவரையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து சில்லென்ற காற்றுடன் கூடிய ஓர் அற்புதமான கிளைமேட் சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

click me!