சென்னையில் திடீர் கனமழை..! ஒரு சில இடங்களில் பேய் மழை..! எங்கெல்லாம் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Aug 30, 2019, 6:09 PM IST
Highlights

நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத நிலையில் கருமேகங்கள் சூழ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது. 

கடந்த ஒரு வார காலமாக வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை திடீரென பெய்ய தொடங்கிய மழை கால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் யாரும் எதிர்பாராத நிலையில் கருமேகங்கள் சூழ சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை முடிந்து வீடு திரும்பும்போது டிராபிக் ஜாமில் சிக்கி அவரவர் வீட்டிற்கு செல்ல கால தாமதமானது.

இந்த நிலையில் இன்று மாலையும் திடீரென மேகமூட்டம் சூழவே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக புரசைவாக்கம், எம்ஆர்சி நகர், போரூர் திருவல்லிக்கேணி, மாம்பழம், தி நகர், நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி போரூர், குரோம்பேட்டை, ஆவடி, பருத்திப்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் பொதுமக்கள் பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீரை பார்த்துக்கொண்டே ஆங்காங்கு சாலைகளில் ஒதுங்கி நிற்பதும் அதேவேளையில் மழையை வரவேற்பதுவுமாக இருக்கின்றனர். 

click me!