8 மாவட்டங்களில் கனமழை..! உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை..!

By ezhil mozhiFirst Published Nov 18, 2019, 12:39 PM IST
Highlights

கோவை தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தேனி, நெல்லை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை..! உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை..! 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதன் காரணமாகவும் வெப்ப சலனம் ஏற்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை தூத்துக்குடி ராமநாதபுரம் தஞ்சாவூர் திருவாரூர் தேனி நெல்லை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 17 செ.மீ  பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஒட்டப்பிடாரத்தில் 7 செ.மீ மழையும், கோத்தகிரியில் 6 சென்டிமீட்டர், ராஜபாளையத்தில் 5 சென்டிமீட்டர், பாளையங்கோட்டையில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

click me!