கொட்டித்தீர்க்கப்போகும் மழை..! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்..!

Published : Aug 24, 2019, 01:08 PM ISTUpdated : Aug 24, 2019, 01:11 PM IST
கொட்டித்தீர்க்கப்போகும் மழை..! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்..!

சுருக்கம்

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் மற்றும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதுமே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பாக திருநெல்வேலி விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை கன்னியாகுமரி புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் திருச்சி காரைக்கால் பெரம்பலூர் நாகப்பட்டினம் கோவை காஞ்சிபுரம் அரியலூர் கடலூர் நீலகிரி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுவையிலும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?