கொட்டித்தீர்க்கப்போகும் மழை..! குடையோடு வெளியே போங்க...!

Published : Sep 09, 2019, 06:06 PM IST
கொட்டித்தீர்க்கப்போகும் மழை..!  குடையோடு வெளியே போங்க...!

சுருக்கம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

கொட்டித்தீர்க்கப்போகும் மழை..!  குடையோடு வெளியே போங்க...! 

கோவை மற்றும் நீலகிரி பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் காஞ்சிபுரம் ராமநாதபுரம் தூத்துக்குடி வேலூர் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்வதும் சில நேரங்களில் மட்டும் கனமழை பெய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இருப்பினும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 11 சென்டி மீட்டர் மழையும் கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சில நேரங்களில் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் மூன்று முறை சென்னையில் மாலை நேரத்தில் மிதமான முதல் ஓரளவிற்கு நல்ல மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக அண்ணா நகர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மாலை நேரத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இன்று சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் உள்ளது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!