மீண்டும் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களில் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது தெரியுமா...?

By ezhil mozhiFirst Published Dec 2, 2019, 2:55 PM IST
Highlights

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 

மீண்டும் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களில் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது தெரியுமா...? 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதாலும் மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

இது தவிர்த்து வரும் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கன மழையும் மூன்று இடங்களில் மிக கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழையும் குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கன மழையை பொருத்தவரை அடுத்த 24 நேரத்தில் குமரி ,நெல்லை ,தூத்துக்குடி ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர்  பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கலாமாம் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேனி ,திண்டுக்கல் நீலகிரி,கோவை ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மன்னார் வளைகுடா, கடல் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்து வரும்  2 நாட்களுக்குள் கடலுக்குள் மீன் பிடிக்க  செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

அக்டோபர் மாதம் முதல் இன்று வரை 40 சென்டிமீட்டர் மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இது இயல்பை விட 11 சென்டிமீட்டர் அதிகம் மழை என்றும் தெரிவைக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு  உள்ளது. 

click me!