2 நாட்களுக்கு எப்படி மழை வரப்போகுதுன்னு பாருங்க..! உஷார் மக்களே..!

By ezhil mozhiFirst Published Nov 25, 2019, 7:29 PM IST
Highlights

கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களாக தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் நெல்லை மாவட்டங்களும் சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு எப்படி மழை வரப்போகுதுன்னு பாருங்க..! உஷார் மக்களே..! 

வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களாக தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் நெல்லை மாவட்டங்களும் சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடற்பகுதியில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு சூறாவளியுடன் கூடிய காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரையில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு மழை பெய்து உள்ளது என்றும் குறிப்பாக கன்னியாகுமரி விருதுநகர் தூத்துக்குடி நெல்லை ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை அதிக அளவு பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மிக குறைந்த அளவு மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நம்பர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை கணக்கிட்டு பார்த்தால் 34 சென்டிமீட்டர் மழை அளவு செய்திருக்க வேண்டும். ஆனால் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 9 சதவீதம் மழை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!