
6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த இடம் தெரியுமா..?
தற்போது குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசாக முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக கடலூரில் 6 சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும்,ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.