13 மாவட்டங்களில் பேய்மழை கொட்டப்போகுதாம்....! வேலூர்ல 4 மணி நேரமாக அப்படியொரு மழையாம்..!

By ezhil mozhiFirst Published Aug 18, 2019, 12:29 PM IST
Highlights

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவாகவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 மாவட்டங்களில் பேய்மழை கொட்டப்போகுதாம்....! வேலூர்ல 4 மணி  நேரமாக அப்படியொரு  மழையாம்..!

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் திருவண்ணாமலை கடலூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுவாகவே பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அடுத்து வரும் 2 நாட்களுக்கு வேலூர் திருவள்ளூர் கிருஷ்ணகிரி தர்மபுரி கடலூர் விழுப்புரம் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரு தினங்களுக்கு சென்னை முழுவதும் மிதமான மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆலங்காயத்தில் 15 சென்டி மீட்டர் மழையும் திருப்பத்தூரில் 10 சென்டிமீட்டர் மழையும்  ஆம்பூரில் 9 சென்டி மீட்டர் மழையும் புதுவையில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!