மேத்தி அல்லது வெந்தய கீரைகள்....இந்த மூன்று கீரைகளை மிஸ் பண்ணாதீங்க..! குளிர் காலத்திற்கு பெஸ்ட்!!

By Anija KannanFirst Published Jan 26, 2022, 1:35 PM IST
Highlights

ஓமைக்ரான் மற்றும் குளிர் கால பிரச்சனைகளை எதிர்கொள்ள சில ஆரோக்கியமான கீரை வகைகளை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் ஒருவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், குளிர்காலங்களில் பெரும்பாலும் பல நோய்த்தொற்றுகள் மற்றும் வியாதிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி,காரனோ ஓமைக்ரான் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், இருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள நோய் எதிர்ப்பை சக்தியை அதிகரிப்பது அவசியமான ஒன்றாகும். 

எனவே, ஓமைக்ரான் மற்றும் குளிர் கால பிரச்சனைகளை எதிர்கொள்ள சில ஆரோக்கியமான கீரை வகைகளை உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேத்தி அல்லது வெந்தய கீரை:

இந்த வெந்தய இலைகள் கசப்பான சுவை கொண்டவை. இவை குளிர்காலத்தில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. மிகவும் ஆரோக்கியமான வெந்தய இலைகள் பெரும்பாலும் உருளைக்கிழங்குடன் காய்கறி கறியாக, சமைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துகளை பொறுத்தவரை, பீட்டா கரோட்டின் அஸ்கார்பிக் அமிலம் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன், இவை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறந்த எடை இழப்புக்கு உதவியாக உள்ளது. மேலும், கொரோனா மற்றும் குளிர்கால பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

கடுகு கீரை: 

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து சமைக்கும் போது, ​​காரமான சுவையுடைய இந்த கடுகு இலைகளை சேர்த்து சமைத்தால் மிகவும் அற்புதமான சுவையை கொடுக்கும்.100 கிராம் கடுகு இலைகளில் வெறும் 27 கலோரிகள் தான் உள்ளது. மேலும் இவை நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி மூலம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.மேலும், இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இருமலை கட்டுப்படுத்த கூடியதும்,  நாள்பட்ட மலசிக்கல் பிரச்சனையை தீர்க்கும் வல்லமை கொண்டது.

முள்ளங்கி கீரை :

முள்ளங்கிக் கீரை அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை. சாலட்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இலைகளில் முள்ளங்கி இலைகளுக்கு முக்கிய பங்குண்டு. இந்த குறைந்த கலோரி இலைகள் ஃபைபர் மூலம் செறிவூட்டப்பட்டு, வளர்சிதை மாற்ற அளவை அதிகரிப்பதில் அதிசயங்களைச் செய்யும். முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு 'வைட்டமின் C'  முள்ளங்கி கீரைகயில் இருக்கிறது. 100 கிராம் முள்ளங்கி இலையில் 16 கலோரிகள் மட்டுமே கிடைக்கும்.

முள்ளங்கி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும், இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

மற்ற கீரைகள்:

முருங்கை, அகத்தி, புதினா, கறிவேப்பிலை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை. பொதுவாக கீரைகள் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்ட ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகளில் ஒன்றாகும். இவை நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் ஒன்று சேரும்போது, ​​அவை எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. மனநிறைவைத் தூண்டுகின்றன மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த பங்களிக்கின்றன.எனவே, மேற்சொன்ன கீரைகளை உண்டு நலமாக வாழ வாழ்த்துக்கள்!
 

click me!