
Harmful Effects of Mobile Phones on Children's Health : தற்போது எல்லோருடைய வீடுகளிலும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கி விட்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கு செல்போன் எவ்வளவு பேராபத்து என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சிறு வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அதன் மூலம் அதிக தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்.
இன்னும் சில பெற்றோர்களோ தங்களது குழந்தை அழும்போது, அடம்பிடிக்கும் போது, ஒழுங்காக சாப்பிடு வேண்டும் என்பதற்காக செல்போன் கொடுக்கிறார்கள். ஆனால் இப்படி செய்வது குழந்தைகளின் மூளையை பாதிக்கும் என்று பலரும் தெரிவதில்லை. உண்மையில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் அது அவர்களின் நூலில் சொல்லித்தருணை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது சரி இப்போது குழந்தைகள் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில்.
குழந்தைகளும் செல்போன்களும்:
சமீப காலமாகவே குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது அதில் கடந்த ஆண்டுகளில் மட்டும் சுமார் 52 சதவீதம் வரை குழந்தைகள் செல்போன் பார்ப்பது உயர்ந்துள்ளதாக கண்டறிந்துள்ளன. ஆய்வின் முடிவில் குழந்தைகளின் மனம், உடல்நலம், பெற்றோர்களின் பராமரிப்பு உள்ளிட்ட குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் போனால் குழந்தைங்களுக்கு ஏற்படும் விளைவுகள்:
குழந்தைகளிடம் செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகமாக இருப்பதால் அதன் விளைவாக பல உடல் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறிந்துள்ளன. அதுவும் குறிப்பாக குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் அதன் விளைவாக அவர்களின் மூளை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்றும், அந்த பாதிப்பின் தாக்கமானது நீண்ட நாள் வரை இருக்கும் என்றும் சொல்லுகின்றனர்.
ஸ்மார்ட் போனின் பயன்பாடு குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மூளை தீரனை சமனற்று இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளன. ஸ்மார்ட் போனை நீண்ட பயன்பாடானது குழந்தைகளின் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போனில் அதிகம் சத்தத்துடன் மியூசிக் கேட்டால் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளன. எனவே பெற்றோர்களே உடல் மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களை ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் பாதுகாப்பது உங்களுடைய கடமை.
குறிப்பு:
குழந்தைகள் அடம்பிடித்தாலோ அழுதாலோ நீங்கள் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழகுவதால் இத்தனை ஆபத்துக்கள் வரும் என்பதை இனியாவது உணருங்கள். குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் குறித்த ஆபத்துகள் தெரியாது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்களது அக்கறை மற்றும் கடமையில் தான் இருக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.