Happy Teddy Day 2024 : டெடி டே ஏன் கொண்டாடுகிறது தெரியுமா..? சுவாரசியமான கதை இதோ!!

By Kalai SelviFirst Published Feb 10, 2024, 9:40 AM IST
Highlights

இன்று டெடி டே கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலன் தன் காதலிக்கு டெடியை பரிசாக வழங்குவார். ஏனெனில், டெடி அன்பின் தனித்துவமான அடையாளமாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் தற்போது காதலர் தினத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். நேற்று சாக்லேட் தினம். இன்று டெடி டே. எனவே டெடி தினத்தை கொண்டாட காதலர்கள் தயாராகிவிட்டனர். ஆனால் இந்த சிறப்பு வாரத்தில் டெடி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? சிலருக்கு இப்படி ஒரு கேள்வி எழலாம். இந்த நாளுக்கும் காதலர் தினத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் நிச்சயம் தோன்றும்.
எனவே, டெடி தினத்தை கொண்டாடும் முன், அதன் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். டெடி தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? கேர்ள் ஃபிரண்ட் இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் அல்லவா, எனவே டெடி டே வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம். வாங்க இப்போது டெடி டே வரலாறு தெரிஞ்சிகலாம்..

டெடி டே வரலாறு:
நவம்பர் 14, 1902 இல், அமெரிக்காவின் 26 வது ஜனாதிபதியான தியோடர் டெடி ரூஸ்வெல்ட் கரடி வேட்டைக்குச் சென்றார். அப்போது சக ஊழியர் கரடியை மரத்தில் கட்டி வைத்திருந்தனர். இதனால் கரடி சத்தமாக அழ ஆரம்பித்தது. பின் தப்பிக்கவும் போராட ஆரம்பித்தது. இதை கண்ட ஜனாதிபதி தியோடர் டெடி ரூஸ்வெல்ட் கரடியைக் கொல்ல மறுத்துவிட்டார்.

Latest Videos

பின்னர் அவர் கரடியின் பெரிய கார்ட்டூனை பத்திரிகையில் அச்சிட்டார். அமெரிக்க பொம்மைக் கடை உரிமையாளர் மாரிஸ் மிக்டோம் இந்த கார்ட்டூனால் மிகவும் ஈர்க்கப்பட்டதால், அவர் ஒரு கரடி பொம்மையை உருவாக்கினார். மேலும், ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் செல்லப்பெயர் டெடி. அவர் கரடியின் உயிரைக் காப்பாற்றியதால், மாரிஸ் மிக்டோம் தான் உருவாக்கிய கரடி பொம்மைக்கு 'டெடி பியர்' என்று பெயர் வைத்தார். அன்றிலிருந்து டெட்டி பியர் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. பின்னர், இந்தக் காதலர் தின வாரத்தில், டெடி டேயும் சேர்க்கப்பட்டது. இது காதலர் தினத்தில் அன்பின் அடையாளமாகவும் சேர்க்கப்பட்டது.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்திற்கு உங்க லவ்வருக்கு ராசிப்படி பரிசு கொடுங்க.. அன்பு மழை பொழியும்..!!

டெடி டே:
ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தின் நான்காவது நாளில் டெடி டே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காதலன் தன் காதலிக்கு டெடியை பரிசாக வழங்குவார். ஏனெனில், டெடி அன்பின் தனித்துவமான அடையாளமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்தை சிறப்பாக இருக்க.. உங்கள் ராசிக்கு ஏற்ப இந்த நிறங்களில் ஆடை அணியுங்கள்!

டெடியின் தேவை அதிகரித்தது:
டெடி கொடுக்கும் பழக்கம் வந்ததால், டெடியின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, சிறிய சைஸ் முதல் பெரிய சைஸ் வரை பல்வேறு வகையான டெட்டிகள் கடைகளில் விற்க்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் டெடி வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதும். இளம் பெண்கள் மத்தியில் டெடி மீது அதிக மோகம் இருப்பதால், இளைஞர்கள் தங்கள் காதலியை கவர டெடி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எந்த டெடியை வாங்கலாம்?

உணர்ச்சிகளைக் காட்டும் டெடி: உங்கள் காதலிக்கு உங்கள்  உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால், நீங்கள் இதயத்துடன் இருக்கும் டெடியை பரிசாக கொடுங்கள்.

ஒரு ஜோடி டெடி: உங்கள் காதலிக்கு ஒரு ஜோடி கரடிகள் இருக்கும் டெடியை பரிசாக கொடுங்கள். ஏனெனில், அவர்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்பது போல, இந்த டெட்டிகளும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ளன என்பதைக் காட்டுங்கள்.

click me!