சவரன் விலையில் சிறிய மாற்றம்..! மாலை நேரப்படி கிராம் ரூ.4128.00...!

By ezhil mozhiFirst Published Mar 4, 2020, 4:35 PM IST
Highlights

கிராமுக்கு ரூ.128 உயர்ந்து 4153 ரூபாய்க்கும், சவரனுக்கு 1024 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சவரன் விலையில் சிறிய மாற்றம்..! மாலை  நேரப்படி கிராம் ரூ.4128.00...!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.128 உயர்ந்து 4153 ரூபாய்க்கும், சவரனுக்கு 1024  ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி 

கிராமுக்கு 25 குறைந்து 4128.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 குறைந்து 33 ஆயிரத்து 24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு 824 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.60 பைசா அதிகரித்து 50.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மற்ற துறைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தின் மீதான முதலீட்டுக்கே முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

click me!