சரசரவென குறைந்தது தங்கம் விலை ...! இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா... ஏக்கத்தில் மக்கள்..!

Published : Sep 19, 2019, 11:51 AM IST
சரசரவென குறைந்தது தங்கம் விலை ...!  இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா... ஏக்கத்தில் மக்கள்..!

சுருக்கம்

ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

சரசரவென குறைந்தது தங்கம் விலை ...!  இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா... ஏக்கத்தில் மக்கள்..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தாலும், நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து உள்ளது.  

ஒரு மாத காலமாகவே சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அதற்கிடையில் சில நாட்கள் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கிளம்பி இருந்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சுமார் 4 ஆயிரம் வரை சவரன் விலை அதிகரித்தது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டுமென்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 32 முதல் 33 ஆயிரம் ஆகும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி 30 ஆயிரத்திலிருந்து 28 ஆயிரம் வரை குறைந்தது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 21 ரூபாய் குறைத்து, சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து உள்ளது. 

காலை நேர நிலவரப்படி, 

கிராம் ரூ.3579.00 ரூபாயாகவும்,  சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 50 பைசா குறைந்து  49.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!