பேச்சுலர்ஸ்கு  ஈசியான  இஞ்சி ஊறுகாய்........!!!

 
Published : Oct 25, 2016, 02:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பேச்சுலர்ஸ்கு  ஈசியான  இஞ்சி ஊறுகாய்........!!!

சுருக்கம்

பேச்சுலர்ஸ்கு  ஈசியான  இஞ்சி ஊறுகாய்........!!!

ஊருகாய் என்றாலே  நாவூறும் ......எது இருக்கோ  இல்லையோ.....பழைய சாதமும்  ஊரூகாயும்  இருந்தாலே போதும் நமக்கு.......

உண்மையில்   இந்த  உணவு  நம் உடல்  நலத்திற்கு   மிகவும்  நல்லது.......

 

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 1 கப்

மிளகாய் தூள் - கால் கப்

மல்லித் தூள் - கால் கப்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

வெல்லம் - அரை கப்

புளி - 1 எலுமிச்சை அளவு

உப்பு - தேவையான அளவு

பூண்டு - 10 பற்கள்

 

தாளிக்க :

எண்ணெய் - ½ கப்

கடுகு - 1 மேஜைக்கரண்டி

சீரகம் - 1 மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய் - 5

பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கைப்பிடியளவு

 

செய்முறை :

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 வெல்லத்தை துருவிக் கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி இஞ்சியை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து ஆற வைக்கவும்.

ஆறியவுடன் இஞ்சி, புளி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனுடன் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

 சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி!!!!!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்