
இந்தியாவில், தற்போது கொரோனாவின் வேரியன்ட் ஓமிக்ரான், டெல்ட்டா வைகை கொரோனா மாறி மாறி தாக்கி வரும் நிலையில், அதன் அறிகுறைகளை வைத்து வேறுபாடு கண்டறியப்படுகிறது. டெல்ட்டா வகை கொரோனாவை விட, ஓமிக்ரான்மா றுபாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவு எனினும், பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். ஆகையால், நோயாளி முழுமையாக குணமடைய அதிக நாட்கள் எடுக்கும். கொரோனாவில் (Coronavirus) இருந்து மீண்டு வரும் நேரத்தில், பலவீனம் அதிகமாக இருக்கும். இது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளைத் தரும் நோயாக இது மாறியுள்ளது. எனவே, இந்த தொற்றுநோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட நபரை மீட்பதிலும் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
கொரோனாவின் அனைத்து மாறுபாடுகளிலிருந்தும் குணமடைய, மருந்துடன் உணவில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். கொரோனா பாதித்த நபர், மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்களான ஜங்க் ஃபுட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் வெளி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவர்கள் எவற்றையெல்லாம் உட்கொள்வது ஆபத்தாகலாம் என்பதை இந்த பதிவில் கானலாம்.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்வதுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம்.
ஜங்க் ஃபுட்ஸ் தவிர்ப்பது நல்லது:
பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் மற்றும் அனைத்து விதமான நொறுக்குத் தீனிகளையும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உட்கொள்ளக் கூடாது. அவை நம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த உணவு சாப்பிட நன்றாகத் தெரிந்தாலும், உடல் பருமனை அதிகரித்து, ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.
பேக் செய்யப்பட்ட உணவுகள்:
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் போது பேக் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடக்கூடாது. இவற்றை சமைப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் இவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய உணவுகளில் ப்ரிசர்வேடிவ்கள் மற்றும் சோடியம் அதிகம் இருக்கும். டின்களில் அல்லது பேக்கெட்டுகளில், சமைக்க எளிதாக வரும் இந்த உணவுகளை உண்பதால் உடலில் வீக்கம் ஏற்படும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக கொரோனாவிலிருந்து முழுமையாக மீள்வதற்கு மிக அதிக நேரம் எடுக்கலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள்:
கொரோனா நோயிலிருந்து மீண்டு வருபவர்களில் சிலருக்கு சில காலம் சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், குணமடையும் போது படிப்படியாக சுவை மீண்டும் வரத் தொடங்கும் போது, நோயாளிக்கு காரமான, மசாலா அதிகமாக உள்ள உணவை சாப்பிட ஆசை வரலாம். ஆனால் இப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய் உள்ள உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனுடன் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. எனவே, நோய்வாய்ப்பட்டவர் வறுத்த மற்றும் பொரித்த உணவைத் தவிர்க்க வேண்டும்.
குளிர் பானங்கள் அருந்துதல்:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குளிர் பானங்கள் அருந்தக் கூடாது. குளிர் பானங்கள் குடிப்பதால் வயிற்றில் வீக்கம் ஏற்படும். இது தவிர, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படலாம். குளிர் பானங்கள் குடிப்பதால் தொண்டையிலும் வலி ஏற்படலாம்.
அதிகமாக காரமான உணவுகள்:
கொரோனா நோயாளி (Corona Patients) இலகுவான மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும். காரமான அல்லது மசாலா அதிகமாக உள்ள உணவுகளுக்குப் பதிலாக எளிய உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக காரமான உணவுகளை உண்பதால் வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் தொண்டை வலி போன்றவை ஏற்படும். இந்த வகை உணவும் இருமல் பிரச்சனையை உண்டாக்கும்.
பெரும்பாலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் பயிறு வகைகள், முட்டை, இறைச்சி, பால், பழங்கள், கீரைகள், ட்ரை புரூட்ஸ் மற்றும் காய்கறிகள் கலந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.