அடி தூள்...! சென்னையில் புதிய மின்சார பேருந்து..! பெரும் குஷியில் மக்கள்...!

Published : Aug 26, 2019, 12:27 PM IST
அடி தூள்...! சென்னையில் புதிய மின்சார பேருந்து..! பெரும் குஷியில் மக்கள்...!

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை இந்த பேருந்து இயக்கப்படும். 32 பேர் அமர்ந்தும் 25 பேர் நின்று கொண்டும் இந்த பேருந்தில் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டை குறைக்கும்  வகையிலும், மக்களின் நலன் கருதியும் சென்னையில் புதிய மின்சார பேருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை இந்த பேருந்து இயக்கப்படும்.32 பேர் அமர்ந்தும் 25 பேர் நின்று கொண்டும் இந்த பேருந்தில் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லவன் சாலையில் உள்ள பணிமனையில் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யவும் நிலையம் தனியாக இதற்கென அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரிகள் கொண்ட இந்த பேருந்தில் ஒரு பேட்டரியை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிசிடிவி கேமரா, பேருந்து நிறுத்தத்தை ஒலிபெருக்கி மூலம் சொல்லும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த மின்சார பேருந்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை  சிறப்பம்சங்கள் கொண்ட மின்சார பேருந்தில் பயணம் செய்ய  மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்